உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவின் வரி மிரட்டல்; மாற்று வழி தேடுவது அவசியம்!

அமெரிக்காவின் வரி மிரட்டல்; மாற்று வழி தேடுவது அவசியம்!

அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, தங்கள் நாடும் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள அவகாசம் தரும் வகையில், வரி விதிப்பை, 90 நாட்களுக்கு ஒத்திவைத்தார். இதனால், ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்த வரி விதிப்பு, வரும் ௭-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என, சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு, இம்மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். இது, அமெரிக்காவுடன் நல்லுறவை தொடர விரும்பும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி ரகங்களில், 28 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய ஜவுளிகளுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். அதேபோல, மருந்து பொருட்கள், அரிசி, மளிகை, வைரம், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் அமெரிக்காவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பால், இந்தப் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, 7.35 லட்சம் கோடி ரூபாயாகும். இது, மற்ற நாடுகளுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாகும். அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள், 3.88 லட்சம் கோடி ரூபாய். தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு, இந்தியாவில், 40 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என, அமெரிக்கா வலியுறுத்துகிறது. அத்துடன், நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால் வணிகத்திலும் கால் பதிக்க அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. அதை அனுமதித்தால், பல கோடி இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விஷயங்களில் தங்களின் நிர்பந்தங்களை இந்திய அரசு ஏற்க வேண்டும் என்பதற்காகவே, அதிபர் டிரம்ப், 25 சதவீதம் வரி விதித்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த தந்திரம் மற்றும் நெருக்கடிகளை, இந்திய பொருட்களுக்கு மாற்று சந்தைகளை கண்டறிவதன் வாயிலாக, மத்திய அரசு முறியடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி, 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயும், ராணுவ தளவாட பொருட்களும் வாங்கக்கூடாது; மீறி வாங்கினால், அபராதம் விதிக்கப்படும்' என, அதிபர் டிரம்ப் அச்சுறுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, எந்த ஒரு நாட்டில் இருந்தும் தள்ளுபடி விலையில், கச்சா எண்ணெய் பெறுவது சிறப்பானதே. இதனால், பல கோடி ரூபாய் மிச்சமாகும். இந்த விஷயத்தில், நம் நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமே அன்றி, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணியக்கூடாது. மொத்தத்தில், அதிபர் டிரம்ப் மிரட்டல்களுக்கு பணியாமல், சுமுகமான முறையில், இரு தரப்பும் பலன் பெறும் வகையிலான தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

JANARTHANAN
ஆக 04, 2025 23:51

அமெரிக்காவில், தேசிய நெடுஞ்சசாலைகள், மாநிலச்சாலைகள் ,குடிநீர் , கழிவுநீர் மற்றும் சுகாதாரத்திற்கு அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. எனவே, நம் நாட்டு இளைஞர்கள் அங்கே வாழ விரும்புகிறார்கள். GST -மாதத்திற்கு இரண்டு லக்ஷம் கோடி பெற்றும் அதனை மேற்கண்ட இனங்களில் செலவு செய்து அமெரிக்காவிற்கு இணையாக வசதிகள் செய்தால் நம் இளைஞர்கள் ஏன் அங்கு போகப்போகிறார்கள்.


rajasekaran
ஆக 04, 2025 18:56

திரு அமிட்ஷா பற்றி DRUMPUKU தெரியவில்லை. பாராளுமன்ற MP எல்லாம் சேர்த்து ELLAMAS யே தேர்ந்தெடுக்க வைப்பார்.


KR india
ஆக 04, 2025 14:11

தேவையான சமயத்தில், அருமையான செய்தி கட்டுரையை வழங்கிய, இந்த எழுத்தாளர் அவர்களுக்கும், வெளியிட்ட "புரட்சி மலர் - தினமலருக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் மத்திய அரசு சார்பில், இது போன்ற செய்திகள் அவர்கள் கவனத்திற்க்கு வருமா என்று தெரிய வில்லை தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா மேடம் அவர்கள் மற்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், இந்த தினமலர் ஆன்-லைன், செய்திகளையாவது படிப்பார்களா ? என்று தெரிய வில்லை படித்தால், அவர்களுக்கு, பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும் யாராவது, அவர்களிடம் கூறினால் நன்று


ஆரூர் ரங்
ஆக 04, 2025 11:40

வேடிக்கை என்னவென்றால் இப்போது கூட அமெரிக்கா நம்மை விட அதிகமாக ரஷ்ய சரக்குகளை இறக்குமதி செய்கிறது. மறைமுக இறக்குமதி மிக அதிகம். தானே கடைப்பிடிக்காத தடையை இந்தியா மீது திணிப்பது அராஜகம்.


MP.K
ஆக 04, 2025 09:59

USA targeted India. What about the measures to be taken to tackle this issue? Indian Products - Made in India. We agree that the Preference must be given to Indian Products. It can be noted that we export largely to USA for about 7 Lakh crore but we import products from USA just for 3 lakh crore only. We rely on USA for selling our product and they target and threaten our country to reduce the tax on USA their products and also asked us to stop importing crude oil and other products from Russia. This global trend must be changed by focusing on world peace instead of making trade war.


ஆரூர் ரங்
ஆக 04, 2025 11:36

நமது நாட்டு IIT, மருத்துவப் பட்டதாரிகளை கொண்டு சென்று அமெரிக்கா அடைந்த முன்னேற்றம் ஏராளம். இவர்களது கல்விக்கு செலவு செய்தது இந்திய அரசு. பெரும்பாலானவர்கள் அமெரிக்க குடிமகன்களாகி இந்தியாவுக்கு எவ்விதத்திலும் உதவுவதில்லை. இது போன்ற BRAIN GAIN ஐ கணக்கில் கொண்டால் நிகர நஷ்டம் நமக்கே.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 04, 2025 07:42

முக்கியமானது வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையை அமெரிக்க வர்த்தகத்திற்கு திறந்து விடவேண்டும் என்பதே அதனை விரிவாக விவாதிக்கவில்லையே


மூர்க்கன்
ஆக 04, 2025 17:19

இன்னொரு என்பீல்ட் துப்பாக்கி தோட்டா நிகழ்ச்சி...சைவ பால் இந்திய பொருளாரதாரத்திற்கு பால் ஊற்றி விடாமல் பார்த்து கொள்ளுங்கள் .


vivek
ஆக 04, 2025 22:44

மூர்க்கஸ், நீ முக்கில் போய் உட்காரு... நாங்க பாத்துக்கிறோம்


m.arunachalam
ஆக 04, 2025 06:43

நாம் அனைவரும் தேவைகளை குறைத்து வாழ பழகிக்கொண்டால் எளிதாக சமாளித்துவிடலாம் . தெளிதல் நலம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை