உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கையில் உறுதியாக நின்று லஞ்சத்தை ஒழித்திருந்தால் பாராட்டி இருக்கலாம்

கொள்கையில் உறுதியாக நின்று லஞ்சத்தை ஒழித்திருந்தால் பாராட்டி இருக்கலாம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:

'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவிற்கு 'பேஸ் வேல்யூ' இருந்தது. ஆனால், நமக்கு பேஸ் வேல்யூ இல்லை. அதனால், ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும்' என, பதவி ஏற்றவுடன், பழனிசாமியிடம் நான் தெரிவித்தேன். அவர் அதை ஏற்கவில்லை.

டவுட் தனபாலு:

அவர் ஏற்காவிட்டால் என்ன... கொள்கையில் உறுதியா நின்னு, குறைந்தபட்சம் இவர் வகித்த வீட்டு வசதி துறையிலாவது லஞ்ச, லாவண்யத்தை ஒழித்துக் காட்டியிருந்தா, 'டவுட்'டே இல்லாம இவரை பாராட்டி இருக்கலாம்... ஆனா, அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியலையே!---

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்:

ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்காத தொழிற்சங்கத்தினர், இப்போது கேட்பதற்கு உள்நோக்கம் உள்ளது. பொங்கல் பண்டிகை யின் போது, தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படும்.

டவுட் தனபாலு:

எதிர்க்கட்சியா இருந்தப்பவும், தேர்தல் வாக்குறுதியிலும், 'ஓய்வூதியர்களின் கோரிக் கையை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்'னு ஆசையை துாண்டி ஓட்டு வாங்கியது யார்...? இப்ப, உள்நோக்கம், வெளிநோக்கம்னு சாக்குபோக்கு சொல்றது, பொறுப்பான அமைச்சருக்கு அழகா என்ற, 'டவுட்' வருதே!---

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி:

லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு சீட்டுகள் தர மம்தா தயாராக இருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் புதிதாக அவர் என்ன தருகிறார். அவரது நிஜ முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு:

இப்ப தானே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு... இன்னும் போக போக பல மாநிலங்களிலும், 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்களின் நிஜ முகம் ஒவ்வொன்றாக வெளிப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 07, 2024 01:23

இப்பொழுது புலம்பி என்ன பலன்?


K.n. Dhasarathan
ஜன 06, 2024 22:56

பன்னீர் செல்வம் கொள்கையை பற்றி பேசுகிறார், தர்ம யுத்தம் என்று டிராமா போட்டார், துணை முதல்வர் பதவி வந்ததும் அனைத்து கொள்கைகளையும் தூக்கி குப்பையில் போட்டார், அது மட்டுமா, அம்மா இறப்பை சும்மா விடமாட்டேன் என்றார், ஆனால் ஆறுமுக சாமி ஆணையத்திற்கு போகாமல் டிமிக்கி கொடுத்தார், மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் ?


K.Ramakrishnan
ஜன 06, 2024 18:49

உங்க மூஞ்சிகளுக்கு பேஸ் வேல்யூ இல்லை என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. மக்கள் திலகத்தை தவிர உங்கள் கட்சியில் யாருக்குமே பேஸ் வேல்யூ கிடையாது. எம்.ஜி.ஆரால்,அவர் உருவாக்கிய சின்னத்துக்கு உள்ள பேஸ் வேல்யூ தான்... எம்.ஜி.ஆர். இருக்கிற வரை அவர்தான் நாடாண்டார். ஆனால் ஜெயலலிதா 1996, 2006 தேர்தலில் தோற்றதை மறந்து விடாதீர்கள். எடப்பாடி 2021ல் தோற்றதையும் மறந்துவிடாதீர்கள்...


Gurumurthy Kalyanaraman
ஜன 06, 2024 12:26

ஊழலே இல்லாத ஆட்சியை கொடுத்தாரு. அதனால அவரு இன்னொருத்தரை குறை சொல்றாரு.


SOMASKANTHAN R
ஜன 06, 2024 11:46

நிதிஷ்குமார் முயற்சியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானது. காங்கிரஸ் பலனை அனுபவிக்க துடிப்பது ஏன் ? எப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் ?


S.L.Narasimman
ஜன 06, 2024 07:48

ஓபிஎஸ் ஊழல் வழக்கை நீதி மன்றம் தானாகவே முன் வந்து தொடுத்து இருக்கிறது. இதில் ஊழல் பற்றி பேசுவது எதற்கு


Suppan
ஜன 06, 2024 14:35

இவர் அடிமடியிலேயே கைவைக்கிறாரே. பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட யார் முன்வருவர்?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை