உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: ''கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை தாங்குகிறது. நான் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கலந்துரையாடினார். அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன; செங்கரும்பு விற்பனைக்கு வந்ததற்கு அ.தி.மு.க., அரசே காரணம். ஆன்லைன் நெல் கொள்முதலில் நீடிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் நிருபர்களை இ.பி.எஸ்., சந்தித்தார். அப்போது, நிருபர்கள் கேள்விக்கு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.கேள்வி: அமித்ஷா வந்து எப்பொழுதும் கூட்டணி ஆட்சி என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.இ.பி.எஸ்., பதில்: கூட்டணி ஆட்சி இல்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இப்பொழுது நல்லா புரிந்து கொள்ளுங்கள். இந்த கட்சிக்கு யார் கூட்டணி தலைமை தாங்குகிறது. நீங்களே சொல்லுங்கள், அப்புறம் நான் எடுக்கிற முடிவு தானே, அப்பொழுது யார் முதல்வர் ஆகிறார்கள். யார் ஆட்சி அமைக்கிறது, சொல்லுங்கள். நீங்கள் சொல்லுங்கள். உங்கள் முடிவை நான் கேட்கிறேன். நீங்கள் எங்களை கேள்வி கேட்டீர்களா? நாங்கள் இருவரும் அமர்ந்து தெளிவுப்படுத்திவிட்டோம். அதுல, இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை தாங்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். அதில் இ.பி.எஸ்., முதல்வர். இன்னும் உங்களுக்கு என்ன தெளிவுப்படுத்த வேண்டும். வேண்டும் என்றோ தோண்டி, தோண்டி விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேண்டும் என்று, கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்று, நினைப்பதால் ஒன்றும் முடியாது. தெளிவான கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும். தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

பந்தியில் பா.ம.க., இல்லை!

நிருபர்: கூட்டணிக்கு வந்தால் மந்திரி சபையில் இடம் கேட்பேன் என்கிறாரே அன்புமணி?இ.பி.எஸ் பதில்: சார், அவங்க வந்தா பாத்துக்கலாம் விடுங்க. ஏங்க, பந்தியிலயே உக்கார வைக்கல, இலை ஓட்டை என்றால் என்ன பண்ணுவது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Astro manian
ஜூலை 17, 2025 11:30

ஒண்ணுந்தெரியாதவனெல்லாம் திமி ரா தெனாவேட்டா கீறப்போ அவர் இருப்பதில் தப்பில்லையேப்பா


Astro manian
ஜூலை 17, 2025 11:24

எடப்பாடியார் குரு பீடத்தின் அருள் பெற்றவர். 234 ம் அவருடையதே.


Astro manian
ஜூலை 17, 2025 11:22

யாருது பேர் சொல்லுப்பா.


T.sthivinayagam
ஜூலை 16, 2025 21:54

முதல்வர் நீங்கள் தான். ஆனால் நாற்காலி அவங்களுது .காலம் மாறிவிட்டது


Thravisham
ஜூலை 16, 2025 21:25

இவரேதான் முதல்வராம் இவரென்ன எம்ஜிஆரா அல்லது ஜெயாவா? தன்னம்பிக்கையென்பது வேறு திமிர் என்பது வேறு. அப்பேர்ப்பட்ட அண்ணாமலையே இம்மாதிரி இல்லை.


Oviya Vijay
ஜூலை 16, 2025 19:07

நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை என்று தெரிந்தும் உங்களின் இந்த துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்து சொல்ல மனம் விழைகிறது... சபாஷ் பேட்டா... இதற்கு மீறி பாஜக தன் வாலைச் சுருட்டிக் கொண்டு இபிஎஸ் பேச்சைத் தான் கேட்க வேண்டுமே தவிர ஷாவின் பாச்சா எல்லாம் இங்கே பலிக்காது என்பது மிகத் தெளிவாகிறது...


Thravisham
ஜூலை 16, 2025 21:28

ஏம்பா 200 ஒனக்கு பிரியாணி குவாட்டர் வந்துடுச்சா


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 18:59

பிஜேபியுடன் இருக்கும்போது தான் எடப்பாடிக்கு பலம். இவர் ஸ்டாலினை எதிர்ப்பது பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? என்பது போன்றது. வடிவேலு அவரது ஆட்களுக்கு கேட்கும்படி சத்தமாகவும், அடிப்பவரிடம் சும்மனாச்சுக்கும் என்றும் நகைச்சுவை பண்ணுவார். அது மாதிரி அவ்வப்போது எடப்பாடியும் பண்ணுவார்.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 16, 2025 18:48

இ.பி.எஸ்.,சரியான முடிவு எடுப்பார்


பிரேம்ஜி
ஜூலை 16, 2025 17:24

ஈபிஎஸ் இருக்கும் வரை தமிழ் நாட்டில் திமுக ஆட்சிதான்! அதேபோல் ராகுல் இருக்கும் வரை மத்தியில் மோடி ஆட்சி தான்! அரசியல் கத்துக்குட்டிகள்!


Kulandai kannan
ஜூலை 16, 2025 16:32

அதிமுக தனித்து ஆட்சி அமைத்தால், 2031ல் திமுக எந்த முயற்சியும் செய்யாமலேயே ஆட்சிக்கு வந்துவிடும். அதிமுக லட்சணம் அப்படி.