உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்

அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' எங்களுக்கு வரும் நெருக்கடிகளை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல, '' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். வரும் 25 ம் தேதி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: கமலுடன் 2026 சட்டசபை தேர்தல் குறித்து பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு2026 சட்டசபை தேர்தல் கடுமையான தேர்தலாக இருக்கும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.அது உண்மையல்ல. தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கூட முரண்பாடாக பேசி கொண்டு இருக்கும் நிலையை தான் பார்க்கிறோம். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை. கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. தி.மு.க.,வை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கிறார்கள் என்பது உண்மை. தி.மு.க., கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அசிங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா என இ.பி.எஸ்., பேசியது, தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சியே தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. வலுவான வாதமும் இல்லை. நெருக்கடியை சந்தித்து தான் கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் நெருக்கடி இருந்தது. அதுபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடியை சந்தித்து அங்குலம் அஙகுலமாக எங்களை வலுப்படுத்தி அங்கீகாரம் பெற்றுள்ளோம். இதனை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற செய்வது எங்கள் அனைவரின் பொறுப்பு. எங்கள் இடையே எத்தனை தொகுதிகளை பகிர்ந்து கொள்கிறோம் என்பது, எங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவாகும். அது சுமூகமாக தான் இருக்கும்.தேர்தல் போட்டி என்பது இரு துருவ போட்டியாக தான் இதுவரை நடந்துள்ளது. இந்த தேர்தலிலும் நடக்கும். 3வது அணி தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி எடுபட்டது இல்லை. பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 3வது அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்களை பொறுத்த வரை அதுவா... இதுவா... என்ற உளவியலில் தான் இருக்கிறார்கள்.தி.மு.க., தலைமையிலான கூட்டணியா, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியா என்று தான் இந்த தேர்தல் நடக்குமே தவிர அதை தாண்டி உருவாக்கும் எந்த கூட்டணியும் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ராஜிமணாளன்
ஜூலை 19, 2025 15:42

சமாளிக்காதீர் வீரத்திருமகனே..


ராஜிமணாளன்
ஜூலை 19, 2025 15:37

பண் டீ கொடுத்து ஏமாற்ற முடியாது என்றார் திருமா.கூடுதல் தொகுதிகள் கேட்போம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றார் இப்போ மிரள்கிறார்.


பேசும் தமிழன்
ஜூலை 18, 2025 09:30

பிளாஸ்டிக் சேர் கொடுக்காமல் தரையில் அமர சொன்னாலும் பரவாயில்லை..... ஆனால் இண்டி கூட்டணியை விட்டு வெளியே போக மாட்டோம்..... எங்களுக்கு தேவை பெட்டி மட்டுமெ..... தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்.... அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன !!!


சாமானியன்
ஜூலை 18, 2025 05:56

திருமா அரசியலை விட்டு ஓய்வு பெற்று புத்த துறவியாவது மேல். தலித்களை வேறு ஒரு தலைவர் பார்த்துக் கொள்வார். சாதிக்கட்சிகளின் எண்ணிக்கை குறையும்.


muth
ஜூலை 17, 2025 22:57

அவமானம் தினம் தினம் அவமானம் கூடி கொண்டே போகிறது . இந்துக்களை பேசினால் இந்துக்கள் மனதை புண்படுத்தினால் இந்துக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் . இயற்கை பார்த்துகொள்ளும். கர்மா தேடி வருவான் வந்துகொண்டுஇருக்கிறான் .


theruvasagan
ஜூலை 17, 2025 22:08

மானம் என்று ஒன்று இருந்தால்தானே அவமானத்தை பற்றி கவலைப்படணும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 17, 2025 21:22

அப்போ இனி பிளாஸ்டிக் சேர் கூட வேண்டாம். சின்ன சின்ன டப்பா மேல் உட்கார்ந்து பேசிவிடலாம் அல்லது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு பேசலாம். எல்லாம் ஒன்று தான்


Raj S
ஜூலை 17, 2025 21:18

அதானே... அவமானப்படறோம்னு சொன்னா எப்பிடி??? அவமானத்தை சந்தோசமா அனுபவிக்கறோம்னு சொன்னாதான சரியா இருக்கும்?


Kjp
ஜூலை 17, 2025 21:09

வாய் கூசாமல் எதையும் பேசி வாங்கி கட்டி கொள்ள தயாராகி விட்டார்.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 21:01

மானம் என்ற ஒன்று இவர்களுக்கு இருந்தால்தானே அவமானப்படமுடியும். அந்த மானம்தான் இவர்களுக்கு எள்ளளவும் இல்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை