உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹவாலா பண பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்

ஹவாலா பண பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் வாயிலாக, ஜாபர் சாதிக் 'நெட்ஒர்க்' குறித்து துப்பு துலக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போதைப்பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 40 கோடி ரூபாயை படம் தயாரிக்க, ஜாபர் சாதிக் சட்ட விரோதமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் மிக நெருக்கமாக இருந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த, ஹவாலா முக்கிய புள்ளி ஒருவரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அவர் வாயிலாக, ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் குறித்த விபரங்களை வெளி யிட மறுத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mohamed Yousuff
ஏப் 21, 2024 13:25

ஆம் குஜராத் பல்கிஸ் பானு வழக்கு , காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி கொலை வழக்கு, குஜராத் கலவர படுகொலை வழக்கு, உபியில் மனித படுகொலை வழக்கு, முதலியன குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதை நினைக்கும் போது மன வேதனை அளிக்கிறது.


R Kay
ஏப் 20, 2024 13:58

சாதிக்கால் பயனடைந்த அனைவரையும் திஹாரில் அடைக்கும்வரை விசாரணை ஓயக்கூடாது


Tamilnesan
ஏப் 20, 2024 13:35

சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவை கொள்ளை அடித்து கொண்டிருக்கார்கல் இதுவரை ஒருவருக்கு தண்டனை கிடைத்துள்ளதா? இருக்கவே இருக்கு உச்சா நீதிமன்றம் விடுதலை செய்ய


Tamilnesan
ஏப் 20, 2024 13:32

எத்தனை பெரிய குற்றங்கள் செய்தாலும் இந்தியாவில் ஒரு கோர்ட் தண்டனை கொடுத்தால் இன்னொரு கோர்ட் தண்டனையை நிறுத்தி வைக்கும் கொடுப்பதை கொடுத்து தீர்ப்பை வெகு எளிதாக வாங்கி விடலாம் ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு இங்கு, அரசியல் வியாதிகள், சிறு பான்மையினர் மற்றும் பொது மக்களுக்கு என்று எழுதப்படாத வெவ்வேறு சட்டங்கள் உள்ளது ஜெய் ஹிந்த்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஏப் 20, 2024 12:36

இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் திமுக உடன்பிறப்புகளின் ஓலம் நம் காதில் தேன் வந்து பாயும்...


V RAMASWAMY
ஏப் 20, 2024 10:40

இதெல்லாம் ஜு ஜுபி அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஐஸ் பெர்க் என்பார்களே அது போல, கண்டுபிடித்திருப்பது நுனி இலை மட்டுமே, இன்னும் கிளைகளும், மரமும் வேர்களும் எங்கெல்லாம் இருக்கின்றன் என்பது கண்டுபிடிக்கவேண்டும் எல்லாவற்றிற்கும் மேல், நடவடிக்கையும் கடும் தண்டனையும் தான் குற்றங்கள் குறைய உதவும், மக்களும் நம்புவார்கள்


R Kay
ஏப் 20, 2024 14:00

ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் All roads lead to Rome என்று அதுபோலத்தான் தமிழகத்தில் எல்லா ஊழல்களும் ஒரே இடத்தை மட்டுமே சென்றடையும்


N.Purushothaman
ஏப் 20, 2024 10:22

இடமாக மாறி கொண்டு வருகிறது


Duruvesan
ஏப் 20, 2024 09:42

சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகி விட்டது...திமுகவை சீண்டி பார்க்காதீங்க... !


Kasimani Baskaran
ஏப் 20, 2024 07:46

நாற்பது கோடி என்பது இவர்கள் பிரேக்பாஸ்ட் சாப்பிட பயன்படுத்தும் தொகை ஆகவே இதை மேலோட்டமாகப்பார்க்காமல் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தால்த்தான் இவர்களை முழுமையாக மதிப்பிட முடியும் வெளிநாடுகளில் லீலை புரிந்திருப்பதால் சம்பந்தப்பட்டவர்களை நியூசிலாந்து, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள சட்ட நடைமுறைகளை பயன்படுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் முடிந்தால் சிங்கப்பூருக்கு அனுப்பி முடிக்கலாம்


NicoleThomson
ஏப் 20, 2024 07:04

ஹவாலாவின் மொத்த உருவமாகி விட்டாது...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை