சென்னை : நாட்டின் ராணுவத்திற்கும், தலைமைக்கும் துணையாக, தெய்வீக பலம் கிடைக்க வேண்டி, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில், ஆந்திராவை சேர்ந்த ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஜனசேனா கட்சி மாநிலத் தலைவர் ஹரிபிரசாத் அறிக்கை:
நாட்டிற்காக போராடும் ராணுவத்திற்கும், நாட்டின் தலைமைக்கும் துணையாக தெய்வீக பலம் கிடைக்க வேண்டி, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்த, பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.திருப்பரங்குன்றத்தில் எலமஞ்ச்சலி எம்.எல்.ஏ., சுந்தரபாபு விஜயகுமார் தலைமையிலும், சுவாமிமலையில் தாடே பள்ளிகூடம் எம்.எல்.ஏ., பொலிசெட்டி ஸ்ரீனிவாஸ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.திருச்செந்துார் கோவிலில், உங்குட்டூர் எம்.எல்.ஏ., பாட்சமட்ல தர்மராஜு தலைமையிலும், பழனி கோவிலில், காக்கிநாடா எம்.எல்.ஏ., பந்தம் வெங்கடேஷ்வரராவ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.திருத்தணி கோவிலில், திருப்பதி எம்.எல்.ஏ., ஆரணி ஸ்ரீனிவாசலு தலைமையிலும், பழமுதிர்சோலையில், ரயில்வே கோடூர் எம்.எல்.ஏ., அரவஸ்ரீதர் தலைமையிலும் தொண்டர்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில் ஹைதராபாதில், பவன் கல்யாணை சந்தித்து பேசினார்.அப்போது, தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு குறித்தும், தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள், தேர்தல் சீர்திருத்தங்கள், தென் மாநிலங்களின் பாதுகாப்பு, தமிழக அரசியலில் ஜனசேனாவின் பங்கு உள்ளிட்டவை குறித்தும், இருவரும் பேசினர்.