உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரம்

மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரம்

தேனி,: தேனி பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மல்லிகை கிலோ ரூ. 2800 முதல் ரூ.3ஆயிரம் வரை விற்பனை ஆனது. நேற்று ரூ.4ஆயிரம் ஆக உயர்ந்தது. முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.350, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.150, செண்டு பூ ரூ.70, செவ்வந்தி ரூ.120க்கு விற்பனை ஆனது.வியாபாரி குமார் கூறுகையில், மல்லிகை பூ தினமும் 3 டன் வரை வரும். தற்போது பனிப்பொழிவால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது.மார்க்கெட்டிற்கு 50 முதல் 60 கிலோ மட்டும் வரத்து உள்ளது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ