உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,விற்கான கதவு மூடப்பட்டு விட்டது அடித்துக் கூறும் அ.தி.மு.க., ஜெயகுமார்

பா.ஜ.,விற்கான கதவு மூடப்பட்டு விட்டது அடித்துக் கூறும் அ.தி.மு.க., ஜெயகுமார்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், அ.தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தலுக்கான அறிக்கை தொடர்பாக, கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு, அ.தி.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான விசுவநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர்ஜெயகுமார் அளித்த பேட்டி: அமித் ஷா தன் கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். கூட்டணியின் கதவு திறந்து இருக்கிறது என அமித் ஷா கூறியுள்ளார்; அவர்கள் திறந்து வைத்திருக்கலாம்.எங்களுடைய முன்னோடிகளான அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக, ஒரு மாநிலத் தலைவர் கடுமையான அளவுக்கு விமர்சனம் செய்தார். அவருக்கு கண்டனங்கள் தெரிவித்த போதும், தொடர்ச்சியாக எங்களைச் சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?பா.ஜ.,வை நாங்கள் கழற்றி விட்டதும், தமிழகம் முழுதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். எந்த காலத்திலும் பா.ஜ.வுடன் இனி கூட்டணி கிடையாது. அந்த நிலையில் இருந்து எப்போதும் மாற மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு இறுக்கமாக கதவை மூடிவிட்டோம்; இந்த விஷயத்தில், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.பன்னீர்செல்வம் தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் பா.ஜ.,வின் கொத்தடிமை. பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., எழுச்சியுடன் இருப்பதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சில தனி மனிதர்கள் சேர்ந்து, பழனிசாமி மீது மோசமான பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர். பிரளயமே ஏற்பட்டாலும், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை எந்தக் கொம்பனாலும் முடக்க முடியாது.ஸ்பெயின் நாட்டில், 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இந்த ஒப்பந்தங்களை யார் போட்டது என தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும், தட்டேந்தி, மடிப்பிச்சை கேட்கும் நிலையை தி.மு.க, அரசு உருவாக்கியுள்ளது. அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த அரசால் யாருக்கும் விடியவில்லை. ஒரு குடும்பத்துக்கும் மட்டுமே விடிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

துணை பொதுச்செயலர் விசுவநாதன் கூறியதாவது:தமிழகம் முழுதும் பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கை, மற்ற கட்சிகளைக் காட்டிலும் மக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.எம்.ஜி.ஆர்., - ஜெ., போல கொடுத்த வாக்குறுதியை பழனிசாமி நிறைவேற்றுவார் என்பதால், பலரும் ஆர்வமுடன் கருத்துக்கள் சொல்லி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி