உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை பெற்றவர் 1.39 லட்சம் பேர்; வெள்ளை அறிக்கையை சொல்லாமலே வெளியிட்டது அரசு!

வேலை பெற்றவர் 1.39 லட்சம் பேர்; வெள்ளை அறிக்கையை சொல்லாமலே வெளியிட்டது அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2021ம் ஆண்டிற்கு பிறகு 46 புதிய தொழிற் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 46 ஆலைகள் திறக்கப்பட்டு 1,39,725 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள், திட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அடிக்கடி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று (அக்.,03) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி துவங்கிய பின் 2030ம் ஆண்டிற்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் துவங்கப்பட்டன.

முதலீட்டாளர்கள்

முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

ஒப்பந்தங்கள்

மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டன. அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவதூறான கருத்து

தொழில் வளர்ச்சியில் புரிந்து வரும் சாதனைகளால் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2021ம் ஆண்டிற்கு பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 46 ஆலைகள் திறக்கப்பட்டு 1,39,725 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணத்தால் தொழில்கள் வரவில்லையே என எதிர்க்கட்சியினர் பொறாமையால் புழுங்குகின்றனர். மக்களிடம் தவறான தகவலைத் தந்து ஆட்சிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை விதைக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்ததாக மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 04, 2024 12:59

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று விட்டனர். வேலையில்லா திண்டாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி படித்து வெளியே வரும் இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதால் கிரிமினல் குற்றங்கள் குறைந்து விடும். தேச விரோத செயல்கள் ஒழிந்து போகும். ஆகவே இதனை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டு உறுதி படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இத்துணை வேலைவாய்ப்புகள் உருவாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து உள்ளவர்கள் பெயர்கள் பூஜ்யம் அளவிற்கு போக வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2024 19:25

நம்பிட்டோம் .......


ஆரூ
அக் 03, 2024 18:42

பெரும்பாலும் 200 உ.பி யோ? அதெல்லாம் ஒரு வேலையா?


hari
அக் 03, 2024 15:42

யாராவது நம்ம முட்டு திலகம் வேணுகோபாலுக்கு ஒரு வேலை வாங்கி குடுங்கப்பா...


பாமரன்
அக் 03, 2024 15:19

உங்களை யாரு வெள்ளை அறிக்கை விட சொல்லி கேட்டது... எங்களையும் இதே மாதிரி மத்திய அரசிடம் கேட்க சொல்றீங்களா... முடிஞ்சா நீங்க காவி அறிக்கை குடுங்க பார்ப்போம்... பிம்பிலிக்கா பிளாக்கி...


kannan
அக் 03, 2024 15:00

Hello, இதையேதான் திரும்பவும் சொல்றீங்க. வெள்ளை அறிக்கை என்றால், தமிழ்நாட்டில், 2021க்கு பிறகு, மாவட்டம்வாரியாக எத்தனை முதலீடு, எந்த கம்பெனிகளால் செய்யப்பட்டது. கம்பெனிவாரியாக எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என்ற முழு விவரத்துடன் அறிக்கை கொடுங்க. அரசு அதிகாரிகளிடமிருந்து இதைத்தான் கேட்கிறோம். ஒன்னரை லட்சம் பேருக்கு வேலை, 10 லட்சம் முதலீடு. இதை அரசியல் தலைவர்கள் ஏகனவே சொல்லிவிட்டாகள்


raja
அக் 03, 2024 14:34

எப்பா மறுபடியும் பொய்யா...இது உலக மகா பொய்டா...


Nandakumar Naidu.
அக் 03, 2024 14:20

வாயிலேயே வடை சுடும் அரசு. அதை நம்பும் நம் மக்கள். வாழ்த்துக்கள்.


Krishna Gurumoorthy
அக் 03, 2024 14:20

திராவிட ஆட்சியில் வேலை வாய்ப்பு கிடைத்தது ஆனால் மோடியின் ஆட்சியில் வேலையில்லாமல் பிச்சை எடுக்கிறார்கள் நல்ல லாஜிக் திராவிட மாடல் ??


Nallavanaga Viruppam
அக் 03, 2024 14:04

வாழ்த்துக்கள், அனைத்திலும் தமிழக அரசு வெளிப்படை தன்மை பின்பற்றவேண்டும்.


முக்கிய வீடியோ