உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

சென்னை: சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில், பாண்டி பஜார் பகுதியைச் பிரதீப் குமார் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் பிரபல தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அது மட்டுமன்றி அவர், பகுதி நேர ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (நவ.,20) தாம்பரம் பைபாஸ் சாலையில், பிரதீப் குமார் பைக்கில் சென்றுள்ளார். அவர் மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=236zu9lb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரதீப் குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
நவ 20, 2024 19:56

பஸ்களுக்கு 80 கிமீ வேகம் தாண்டாதவாறு பம்ப் லாக் செய்துள்ளது போல அனைத்து கார்களுக்கும் 65 கிமீ அதிகபட்ச வேகம் வைத்து பம்ப் லாக் செய்ய வேண்டும்.. இல்லை என்றால் விபத்துக்கள் அதிகம் ஆகும்


அருணாசலம்
நவ 20, 2024 19:50

அந்த காருக்கு இரண்டு முறை அபராதம் விதித்து challan கொடுத்துள்ளனர். அதிவேகம் மற்றும் பாதசாரிகள் கோடு தாண்டி நிறுத்தியது. இதுவரை அபராதம் செலுத்தவில்லை.


கத்தரிக்காய் வியாபாரி
நவ 20, 2024 18:36

காரின் நம்பரை பார்த்தாலே ஒரு பெரிய தறுதலையோட சின்ன தறுதலை ஓட்டிட்டு வந்துருக்கிறதுன்னு நல்லா தெரியுது. இப்ப எவனோ ஒருத்தன் வந்து நாந்தான் ஓட்டிட்டு வந்தேன்னு சொல்லப்போறான்


D.Ambujavalli
நவ 20, 2024 17:42

எந்தக் கழகக் கண்மணியின் செல்லக் குழந்தை ஓட்டி சென்றதோ ? புதுக் கார் பெருமையில் சாலையில் ரேஸ் ஓடியிருக்கும் டிரைவர் முன் வந்து சரண்டர் ஆக வைத்துவிடுவார்கள்


BALACHANDRAN
நவ 20, 2024 17:13

அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறேன்


BALACHANDRAN
நவ 20, 2024 17:12

இறப்பு இவ்வளவு எளிதாகி விட்டது என்று மனம் வருத்தப்படுகிறது.


BALACHANDRAN
நவ 20, 2024 17:10

மனம் வேதனையாக இருக்கிறது யாருக்கு எப்போது விபத்து என்று சொல்ல முடியவில்லை குறைவானதால் பகுதி நேர வேலையில் இரண்டு பக்கம் உள்ளார் என்பது தெரிகிறது அரசாங்கம் மனம் இறங்கி உதவி செய்ய வேண்டும் காப்பீடு திட்டம் உதவி செய்யுமா என்று தெரியவில்லை. நான் பிரார்த்தனை செய்வது என்னவென்றால் அகால மரணம் தவிர்க்கப்பட வேண்டும் வெறும் இரங்கலை மட்டும் அந்த குடும்பத்திற்கு தெரிவிப்பது சமாதானம் ஆகவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை


Perumal Pillai
நவ 20, 2024 16:38

The law of this land is mortally afraid of BMW owners and hence nothing will happen.


Kannan Chandran
நவ 20, 2024 16:06

யாராக இருக்கும், அதே மனநல குன்றிய நபர், சிகிச்சைக்காக சென்று வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விட்டது - விடியலின் காவல்துறை...,


Sekar Times
நவ 20, 2024 14:55

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை