உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு

திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு

மதுரை: ''சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,'' என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார். மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு அடிப்படையில், டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும், டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என குறிப்பிட்டார்.

மேல்முறையீட்டு மனு

ராம ரவிகுமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி .ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.

அறிக்கை சமர்ப்பிப்பு

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மீண்டும் இந்த நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர் தரப்பை மலையேற அனுமதிக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை செல்ல விடாமல் போலீசாருடன் கமிஷனர் தடுத்ததாக துணை கமாண்டன்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்' 'எனவே, தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் டிச., 17ல் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.அந்த வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். தலைமைச் செயலர்: முருகானந்தம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலியில் ஆஜராகினர். கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் நேரில் ஆஜராகினர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பழனிவேல்ராஜன், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா.கதிரவன், மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினர். தலைமைச் செயலர்: நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை தருகிறோம். நிறைவேற்றக்கூடாது என எந்த உள்நோக் கமும் இல்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை , குழப்பமான சூழலில் மேல் முறையீடு செய்யப்படுகிறது. எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றொரு வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் தடை உத்தரவுகளை கலெக்டர்கள் தாங்களாகவே பிறப்பித்தனரா அல்லது அறிவுறுத்தல்களின் படி பிறப்பித்தனரா என்பதை தெளிவுபடுத்த தலைமைச் செயலர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

நிறைவேற்ற வேண்டும்

மற்றொரு வழக்கும் தலைமைச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவ்வழக்கிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணமாக கூறி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே ஆலமரத்துப்பட்டியில் ஒரு சட்ட விரோத சர்ச் கட்டுமானத்திற்கு எதிராக வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினர். அந்த வழக்கிலும் நான் பிறப்பித்த தடை உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. அந்த வழக்கு, இன்று (டிச., 18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆத்துார் தாசில்தார், 'நீதிமன்ற தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. சட்டம்- - ஒழுங்கு பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை' என அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சர்ச் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், கட்டுமானம் தொடர்கிறது. அந்த இடம் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். ஆனால், அதிகாரிகள் அக்கட்டடத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என்பது குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டியுள்ளது. நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதிக்காமல் அல்லது அது ரத்து செய்யாமல் இருந்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

ஒத்திவைப்பு

சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாகக் கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அது, அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்கும். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜன., 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்ட நீதிபதி

திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில், உயர் நீதிமன்ற அமர்வு முன் நேற்று முன்தினம் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார்' என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனிடம் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமிழக அரசு சார்பில், காணொலியில் வாதாட முயன்றார் விகாஸ் சிங். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது: நேற்று முன்தினம் தீபத்துாண் ரிட் மேல் முறையீட்டு வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வில் வந்த போது, வாதத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நாளிதழ்கள் படித்து அறிந்து கொண்டேன். இதற்கு விளக்கம் தேவை. தற்போது தங்களிடம் பேச வாய்ப்பில்லை. தலைமைச் செயலரின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அதுவரை காத்திருக்கவும். உங்கள் ஆடியோவை 'மியூட்' செய்து விடுங்கள். இவ்வாறு குறிப்பிட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் விசாரணையை தொடர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

VEERAAKKUMAR T N
டிச 20, 2025 03:48

பூரண சந்திரனை தற்கொலைக்கு தூண்டியதற்காக, மேற்கண்ட அனைவருக்கும் உரிய செக்சன் படி தண்டனை வழங்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்துகொண்டு தடுத்த முதல்வருக்கும் இதே தண்டனை வழங்க வேண்டும். நீதி நிலைக்க வேண்டும். நீதிமன்றம் மாண்பு காக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, சாதாரண மக்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை, நன்மதிப்பு ஏற்படும்.


ravi ravi
டிச 19, 2025 14:29

ஓட்டுவங்கிக்காக வேண்டி பிற இனத்தை காக்க, இந்துக்களின் மத நம்பிக்கையை ,உணர்வுகளை எந்த மாநில அரசும் நசுக்கக்கூடாது


V GOPALAN
டிச 19, 2025 06:30

கமிஷனர் பட்டங்கள் மற்றும் பதவிகளை பறித்துவிடவும் அவருடைய ஆதார் மற்றும் பான் நம்பரை முதலியார் வேண்டும் பஃ சேட்டலெமென்ட் செய்ய கூடாது


Gajageswari
டிச 19, 2025 05:31

இவ்வாறு அரசு அதிகாரிகளுக்கு அவகாசம் அளிப்பதால் இந்த நாடு நாசமாக போய் கொண்டுள்ளது. குறைந்த பட்சம் கோயில் செயல் அலுவலருக்காவது 1 வாரம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.


Sridhar
டிச 18, 2025 15:17

மன்னிக்க முடியாத செயல் என்று கூறியபிறகு மீண்டும் ஏன் மற்றொரு தேதிக்கு ஒத்திவைப்பு செய்கிறார்கள்? உடனே தீர்ப்பை அளித்து சட்டத்தை மதிக்காத அவர்களை சிறையில் தள்ளவேண்டியதுதானே? அவர்களின் எந்த விளக்கம் செய்த குற்றத்தை இல்லாமல் ஆக்கிவிடும்? நேரம் கொடுக்க கொடுக்க விசயம் நீர்த்துப்போகும். அதுதான் நோக்கமா?


Natchimuthu Chithiraisamy
டிச 18, 2025 11:19

காட்டுமிராண்டி மொழி தமிழ் என்று சொல்லும் கூட்டம் வேறு மாநிலத்திலிருந்து வந்து வாக்கு நடத்தி எந்த மொழி நல்ல மொழி என்று தெரிவு செய்வோம் என்றால் தேர்வு செய்த மொழி தமிழ் மொழியாக இருக்காது தமிழ் மொழி ஜெயிக்காது என எந்த தமிழ் ஆட்களும் தமிழுக்கு ஒட்டு போடா மாட்டான்.


angbu ganesh
டிச 18, 2025 09:40

எடுப்பர் கைப்பாவையா இருக்க கூதது தலைமை செயலர் வாங்கிற சம்பளத்துக்கு நேர்மையா வேல செயுதுங்க இவனுங்க எல்லாம் ஏன் நாடு கடத்த கூடாது கொள்ள கூட்டத்தோட


M S RAGHUNATHAN
டிச 18, 2025 08:58

சிதம்பரம் சபாநாயகர் கோயில் வழக்கில் வாதாடிய வடக்கத்திய வக்கீல்களுக்கு லக்ஷக் கணக்கில் Fees கொடுக்க, கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொடுத்து இருக்கிறார்கள். மேலும் HRCE Commissioner Common Fund இல் இருந்து ஏராளமான பணம் எடுக்கப் பட்டு தரப் பட்டு இருக்கிறது. இது HRCE சட்டத்தை மீறிய செயல். அரசும், அறநிலைய துறையும் நீதி மன்ற தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் மதிக்க கூடாது என்ற நிலையில் இருக்கிறது. இந்த போக்கை நீதி மன்றங்களும் கண்டும் காணாமலும் இருக்கிறது. அவ்வப்பொழுது கண்டனம், கடும் கண்டனம் என்று சொல்லி மயில் இரஹால் வருடி விடுகிறது. ஒரு முறை முதன்மை செயலர் மற்றும் ஆணையரை ஒரு 15 நாள் அல்லது ஒரு வாரம் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து சிறைக்கு அனுப்பினால் எல்லாம் இனி ஒழுங்காக நடக்கும். எல்லா நீதிபதிகளும் பிச்சை போட்டதால் வந்தவர்கள் அல்ல. The Judges should restore the majesty of Court and its judgements. Otherwise, the judiciary will fall apart.


GMM
டிச 18, 2025 08:27

தமிழக மாநிலம் அரசு அல்ல. படை இல்லாதவர் மன்னவர் அல்ல. தமிழக நிர்வாகம். தலைமை செயலர் ஆளும் கட்சி பிடியில் இருக்க கூடாது. உறுப்பினர்கள் அமைச்சர் உட்பட தங்கள் தொகுதியில் தங்க வேண்டும். சட்ட மன்றம் கூடும்போது சென்னை வர வேண்டும். சென்னையில் உட்கார்ந்து கொண்டு 24 மணி நேரம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கெட்ட கனவை தலைமை செயலர் எப்படி நீதிமன்றத்தில் சொல்வார். ஒரு பியூன் கூட பணி பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்த பின் தான் விடுவிக்க வேண்டும். கல்வி அவசியம் இல்லாத அமைச்சருக்கு அம்பேத்கார் அப்படி அதிகாரம் கொடுக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சியில் அமைச்சர் இல்லாமல் நிர்வாகம் இயங்கும். நிர்வாகம் இல்லாமல் அமைச்சர் இயங்க முடியாது. மீறுவது அமைச்சர்? பழி வாங்கி நிற்பது அதிகாரிகள்.


Kalyanaraman
டிச 18, 2025 07:44

நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் திமுகவின் முஸ்லிம் மத அரசியலை தூண்டுவதற்கும் மத வெறியை தூண்டுவதற்கும் ஆதரவாக இருக்கிறதோ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை