உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: விபத்து மரணமாக பதிவு செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் புதிய கோவிந்தபுரத்தை சேர்ந்த சரத்குமார் சென்ற கார் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆற்றுப்பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, கார் உரிமையாளர் சரத்குமார் மற்றும் காரை ஓட்டிய டிரைவர் சாரதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக,சரத்குமாரிடம் கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ், விபத்து மரணம் என சிஎஸ்ஆரில் பதிவு செய்ய, ரூ.10,000 தர வேண்டும் என்றும், முதல் தவணையாக ரூ.5000 மும், 2வது தவணையாக ரூ.2000 மும் வாங்கிய நிலையில் மீதமுள்ள தொகையான ரூ.3000த்தை கட்டாயமாக கொடுக்கும்படி பேரம் பேசிய வீடியோ வெளியான நிலையில், கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜை இன்று சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 21:54

பணியை செய்ய லஞ்சம் , விடியல் மாடல் என்பது இதுதானா முதல்வரே இது போன்று எவ்வளவு ssi ? லஞ்சம் வாங்குவது தவறு என்று இவர்களுக்கு உணர்த்த என்னதான் வழி ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை