உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2400 பேர் மட்டுமே வைகையில் இறங்க அனுமதி

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2400 பேர் மட்டுமே வைகையில் இறங்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை (ஏப்.,23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். இது குறித்து மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. நாளை கள்ளழகர் வைகையில் இறங்கும் இடத்தில் விஐபிகளுக்கு 2400 பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும். பவர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சினால் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஏப் 22, 2024 20:33

விடியாத அரசு ஆட்சியில் இப்படி தான் இருக்கும்... அவர்களின் ஒரே நோக்கம்... இந்து பண்டிகைகளை சீரழிப்பது.... அதற்க்கு முட்டுக்கட்டை போடுவது மட்டுமெ.... எத்தனை தடை வந்தாலும்... இந்து மதம் மேன்மேலும் செழித்து வளரும்.... அதில் எந்த சந்தேகமும் இல்லை.


K.SANTHANAM
ஏப் 22, 2024 17:32

இத்தகைய தலையீடுதேர்தலுக்கு முன்பு கூறியிருந்தால்மதுரை மக்களே உஷார் முன்னதாக ஜல்லிக்கட்டு தடை செய்து பின்பு பல்வேறுபட்ட நிபந்தனைதற்போது இந்த கட்டுப்பாடு


krishnamurthy
ஏப் 22, 2024 17:23

இதை இவர்கள் சொல்வது சரியாக படவில்லை


அப்புசாமி
ஏப் 22, 2024 16:44

அடப்போங்கட.. நீங்களும்.உங்க அனுமதியும்... பேசாம மேம்பாலத்தில் நடந்து போகச் சொல்லுங்க.


Prasanna Krishnan R
ஏப் 22, 2024 16:17

Who the hell are these rascals to give permission for our festival? Stay away from this or you will face the consequences. I warn the police.


ram
ஏப் 22, 2024 14:38

இப்போது ஹிந்து பண்டிகைகளுக்கு நீதி மன்றம் குறுக்கீடு அதிகமாக இருக்குது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ