உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துாரில் கந்த சஷ்டி கட்டணம் 1000 ரூபாய்?

திருச்செந்துாரில் கந்த சஷ்டி கட்டணம் 1000 ரூபாய்?

மதுரை : திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டியின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. கூட்டம் அதிகமான நாட்களில் கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது.கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக நபருக்கு ரூ.1000, விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2000, அபிேஷக தரிசன கட்டணம் நபருக்கு ரூ.3000 வசூலிக்க 2018ல் அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.அதை அமல்படுத்தவில்லை. 2023 ல் கந்த சஷ்டியின் போது அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. எதிராக பக்தர்கள் போராடினர். கட்டண உயர்வை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.2024 கந்த சஷ்டியின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணம் நபருக்கு ரூ.1000 வசூலிக்க உள்ளதாக செப்.18 ல் கோயில் அலுவலக சுவற்றில் அறிவிப்பு இடம்பெற்றது. இதில் தக்கார் கையொப்பம் இல்லை. பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவிப்பு வெளியிடவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்தது.கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதற்காக 2018 ல் வெளியான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க திருப்பதி கோயிலில் உள்ளதுபோல் ஆதார் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு முன் கூட்டியே இணையதளம் மூலம் டோக்கன் வழங்க வேண்டும். தரிசன டோக்கன் வழங்க தனி கவுன்டர்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.7 க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Laxmi B
நவ 06, 2024 14:12

கடவுளைதரிசனம் செய்ய லட்சமா. மனிதர் லட்சம். வாங்கராங்களா. கடவுள் கேட்கின்றார. இதுஎன்ன, ஞாயம் ஏழைகள், என்ன செய்வார்கள்.


செந்தில்குமார் திருப்பூர்
அக் 25, 2024 12:43

நவம்பர் 7ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்தால் என்ன விசாரிக்க விட்டால் என்ன நவம்பர் 7 அன்று தான் கந்த சஷ்டி செத்துப்போனவருக்கு ஜாதகம் பார்த்து என்ன பலன்???


ஆரூர் ரங்
அக் 25, 2024 12:08

முருகன் நம்மைப் பார்ப்பதன் பெயர்தான் தரிசனம். நாமே 1000 கொடுத்து அவரைப் பார்க்க முடியும் என்பது எப்படிப்பட்டது?


Rasheel
அக் 25, 2024 11:34

பகுத்தறிவை பார்த்து முருகன் ஓடி போயி பல வருடங்கள் ஆகிவிட்டது.


Ms Mahadevan Mahadevan
அக் 25, 2024 10:01

கடவுளை தரிசிக்க கட்டனமா? இன்னும் கோவில் கொள்ளையர்களின் கொட்டமாகி விட்டதா? பராசக்தி வசனம் ஸ்டாலின் இக்கு யாராவது ஞாபகபடுதுங்கள்


Jysenn
அக் 25, 2024 10:00

திமுக ஆட்சியில் கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது .


Ms Mahadevan Mahadevan
அக் 25, 2024 09:58

அண்ணே கடவுள் அப்பிடினா யார் அண்ணே? 2000 ருபாய் கொடுத்தால் பக்கத்தில் தெரிவார். 1000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் தெரிவார். ரூபாய் கொடுக்க வில்லனா தெரிய மாட்டார். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள் செழிப்பா இருப்பார்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 25, 2024 08:51

இந்த கந்த சஷ்டி கூட்டத்தில் சிக்கிக்கொள்ள, இந்து மதத்தின் ஒரு பிரிவினர் வர மாட்டார்கள். கோவில் ஏற்பாடுகள், கட்டணம் பற்றியெல்லாம் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.


Barakat Ali
அக் 25, 2024 12:19

விமர்சிப்பதில் என்ன தவறு?? அதில் உமக்கென்ன பிரச்னை ?? கட்டணம் செலுத்தி தரிசனம் செய்பவர்கள் விமர்சிக்க உரிமையில்லையா ??


கிஜன்
அக் 25, 2024 08:07

மாற்று மதத்தினர் வழிபாட்டு ஸ்தலங்களில் .... நுழைவு கட்டணம் இலவசம் ...


Rasheel
அக் 25, 2024 11:32

ஆனால் பெண்கள் போக முடியாது.


VENKATASUBRAMANIAN
அக் 25, 2024 08:06

கோவில் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது. எங்கேயோ கேட்டது போல் உள்ளதா. திருட்டு திமுகவின் வசனம். இதுதான் திராவிட மாடல்


வைகுண்டேஸ்வரன்
அக் 25, 2024 08:48

திருச்செந்தூர் கோவில் கட்டணங்களை உயர்த்தியது EPS ஆட்சியில் 2017 ல் என்கிற உண்மை தெரியுமா? இதே தி. மலரில் தான் நான் படித்தேன். கந்த சஷ்டி அன்னிக்கு தான் கோவிலுக்கு போகணுமா? மற்ற நாட்களில் போனால் முருகர் கண்டுக்க மாட்டாரா? அருள் பாலிக்க மாட்டாரா?


சமீபத்திய செய்தி