உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கை:

மும்பை சி.எஸ்.டி.,யில் இருந்து, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25ம் தேதிகளில், நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம், 1:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரியில் இருந்து, மே 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26ம் தேதிகளில், மாலை, 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 4:15 மணிக்கு மும்பை செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்துார் வழியாக இயக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி