உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காரைக்குடி சர்வோதயா சங்க அலுவலக பொருட்கள் ஜப்தி

 காரைக்குடி சர்வோதயா சங்க அலுவலக பொருட்கள் ஜப்தி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதுார் தொழிலாளர் நீதிமன்ற உத்தரவுபடி சர்வோதயா சங்க அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டன. -காரைக்குடியில் சர்வோதயா சங்க தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 1994ம் ஆண்டு சங்கரன்கோவிலை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் உதவியாளராக இருந்தார். 6 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி அவரை பணிநீக்கம் செய்தனர். இது குறித்து மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், சர்வோதயா சங்க அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய மதுரை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி ஜமுனா உத்தர விட்டார். இதையடுத்து நேற்று நீதிமன்ற ஊழியர்கள், போலீசாருடன் வந்த பார்த்தசாரதி அலுவலகத்தில் இருந்த டேபிள், சேர், கம்ப்யூட்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர். பார்த்தசாரதி கூறியதாவது: என்னை வேலையில் சேர்க்க உத்தரவிட்டும், 25 ஆண்டாக வேலை வழங்காமலும், மாதாந்திர நிதி உதவி தொகை ரூ.11 லட்சம் வரை தராமலும் இருந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஜப்தி செய்துள்ளோம். இன்னும் ரூ.10 லட்சத்தை சர்வோதயா சங்கம் தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !