உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறும்படம் பார்த்த போது கைதட்டி ரசித்த ராஜ்நாத்

குறும்படம் பார்த்த போது கைதட்டி ரசித்த ராஜ்நாத்

கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ராஜ்நாத்சிங் வேண்டுகோளை ஏற்று, கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தனர்* விழா மேடையின் பின்புறம் அமைக்கப்பட்ட பேக் ரேப்பரில், 'காவி' நிறத்தில் லைட்டிங் அமைக்கப்பட்டிருந்தது. வள்ளுவர் கோட்ட முகப்பு வைக்கப்பட்டிருந்தது. அதன் முன், பண பெட்டகத்தின் மேலே கருணாநிதி உருவ நாணயம் எழுந்து வருவது போல, செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருந்தது. இதை, ராஜ்நாத் சிங் பொத்தானை அழுத்தி துவக்கி வைக்கவும், நாணயம் எழுந்து வந்த காட்சியை, ராஜ்நாத் சிங் திரும்பி பார்த்து ரசித்தார்* கருணாநிதி ஆட்சியில் வரப்பட்ட கைரிக் ஷா ஒழிப்பு, சமத்துவபுரம், சிப்காட், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், அவரின் அரசியல் மற்றும் கலையுலக வாழ்க்கை குறித்த, 2 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது. அதை ராஜ்நாத் கைதட்டி ரசித்து பார்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 19, 2024 22:24

நூறு ரூபாய் எனும் புழுவுக்கு இறைக்கு ஆசைப்பட்டு திமுக எனும் மீன் மத்திய அரசின் தூண்டிலில் சிக்குமா..?


Ramaswamy Jayaraman
ஆக 19, 2024 15:56

குடமுருட்டி குண்டு விவகாரம் காட்டப்பட்டதா. சர்க்காரியா கமிசன் விவகாரம் விளக்கப்பட்டதா.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 19, 2024 12:49

வான்கோழி நாவல் படமாக்கப்படுமா ???? ஒருவேளை வாழமுடியாதவர்கள் படமாக்கப்படுமா ???? யார் யார் நடிப்பார்கள் ????


ஆரூர் ரங்
ஆக 19, 2024 09:36

அந்த ரயிலைக் காட்டாம விட்டது கண்டனத்துக்குரியது.


sankaranarayanan
ஆக 19, 2024 09:25

அமோக வரவேர்ப்பு அங்கீகரிப்பு கொடுத்து விட்டார்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி