உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி விவகாரம்: எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை: மத்திய அமைச்சர்

கீழடி விவகாரம்: எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை: மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''கீழடி தொடர்பான எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை,'' என மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளார்.சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,''தமிழகத்தில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும். இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், எனத் தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். '5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள்' என்றெல்லாம், உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? எனக்கேள்வி எழுப்பி இருந்தார்.இந்நிலையில் கஜேந்திர ஷெகாவத் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழகம் பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூன் 12, 2025 04:12

திராவிட ஆராச்சியாளர்கள் உருட்டும் உருட்டுகள் பாதிக்குமேல் பெரியார் இல்லாமல் தமிழன் கால் கழுவக்கூட கற்றிருக்கவில்லை என்று சொல்வது போலத்தான். எந்த ஒரு உலோகத்தையும் கார்பன் டேட்டிங் செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சில ஆய்வுகள் இருந்தன...


Lakshumanan Aruna
ஜூன் 12, 2025 14:12

ஆமா உனக்கு ரொம்ப தெறியும் சிங்கப்பூர்ல நீ வேலையே பார்க்குறது இல்ல! நொட்ட சொல்றதுதான் வேலை


தாமரை மலர்கிறது
ஜூன் 12, 2025 01:43

கீழடியில் கிடைத்த நாலு மண்டையோடு மற்றும் மண்சட்டியை வைத்துக்கொண்டு ஸ்டாலின் சும்மாவேனும் பிலிம் காட்டிவருகிறார். அங்கு சொல்வதற்கென்று ஒன்றுமில்லை. இந்தியாவில் எங்கு தோண்டினாலும் இது கிடைக்கும். ஆனால் அங்கெல்லாம் பிலிம் காட்ட ஸ்டாலின் இல்லை. அவ்வளவுதான். வெட்டியாக பணத்தை மேற்கொண்டு வீணடிக்காமல், நிலத்தை பொதுமக்களின் செயல்பாட்ற்கு விடுவது நல்லது.


ManiK
ஜூன் 11, 2025 22:30

மத்திய அமைச்சர் சொல்லுவது அறிவார்ந்த விஷயம். அது இந்த திமுக அரசுக்கு துளியும் சம்பந்தமில்லாதது. தங்கம் தன்னரசு மாதிரி சென்டிமெட்டல் சினிமா டயலாக் எதுக்காகவும் உதவாது.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 22:11

அறிவியலில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. மறுக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வு முடிவுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில் அனைத்துலக கருத்தரங்குகளில் பல்பு வாங்க வேண்டியிருக்கும். பழம்பெரும் தொல்லியல் ஆய்வாளர் திரு ஐராவதம்கூட தான் முன்பு ஆய்ந்து கூறியதை கடைசியில் திரும்ப பெற்ற செய்திகள் வந்தன. சிந்துசமவெளி நாகரீக ஆய்வுகளைகூட சில ஆய்வாளர்கள் துவக்கத்திலிருந்து மறுபரிசீலனை செய்கிறார்களாம்.


Svs Yaadum oore
ஜூன் 11, 2025 21:35

விடியல் திராவிடனுங்க சொல்லுகிறபடி விடியல் மதம் மாற்றிகள் இழ்டத்துக்கு தமிழன் வரலாறு எழுத முடியாது ....கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம் விடியல் கண்டுபிடிப்பு .. அதனால் தமிழனுக்கு மதம் கிடையாதாம் ..தமிழன் ஹிந்துக்கள் கிடையாதாம் ...ஆனால் இங்குள்ள மதம் மாற்றும் மதத்தை சேர்ந்தவன் மொத்தமும் தமிழனாம் ....இதுதான் விடியல் மதம் மாற்றிகள் சொல்லும் கீழடி வரலாறு ...முதலில் கீழடிக்கு விடியல் ஜெகஜால கஸ்பர் எதுக்கு போகனும்?? ..அவனுக்கும் கீழடிக்கும் என்ன சம்பந்தம் ??.....


Svs Yaadum oore
ஜூன் 11, 2025 21:32

கீழடிக்கு விடியல் ஜெகஜால கஸ்பர் எதுக்கு போகனும்? அதுக்கு காரணம் என்ன? ....அவருக்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு உள்ளது ??..கீழடிக்கும் மதம் மாற்றிகளுக்கும் என்ன சம்பந்தம்?? ...கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம் என்று விடியல் ஜெகஜால கஸ்பர் கண்டுபிடித்து விட்டார்களாம். அதனால் தமிழனுக்கு மதம் கிடையாதாம் ..தமிழன் ஹிந்துக்கள் கிடையாதாம் ...ஆனால் இங்குள்ள சோற்றுக்கு மதம் மாற்றும் மதத்தை சேர்ந்தவர்கள் மொத்தமும் தமிழனாம் .. . இவங்கதான் என்னமோ தமிழனை காப்பாற்றுவது போல கீழடி கீழடி என்று கூவுராங்க ....


புதிய வீடியோ