உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள மருத்துவ கழிவு ஏற்றி வந்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி

கேரள மருத்துவ கழிவு ஏற்றி வந்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=socp2w8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பசுமை தீர்ப்பாயம் உத்தரவு படி, கேரளா அதிகாரிகள் லாரி உடன் வந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி சென்றனர். இதற்கிடையே, மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்.,03) ஐகோர்ட் மதுரைக்கிளை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: * மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது. * அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவை தமிழகத்தில் கொட்டுவது தீவிரமான குற்றமாகும்.* இதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. பின்னர், மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
பிப் 04, 2025 09:01

குப்பை லாரிகள் டிரைவர் இல்லாம இடாது யுவர் ஆனர். அந்த டிரைவர்களை தூக்கில் போடுங்க. உளுத்துப்போன சட்டங்களை வெச்சுக்கிட்டு வாகனங்களை ஏலம் விட முடியுமா? அந்த வண்டியெல்லாம் எப்பவோ காயலாங்கடைக்கு போக வேண்டியவை. வேணும்னா ஆர்.சி புக்கைப் பாருங்க.


தாமரை மலர்கிறது
பிப் 03, 2025 23:43

கேரளா கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு ஏற்கனவே திமுக கமிஷன் வாங்கி விட்டது யுவர் ஆனர் . அதனால் அவர்களுக்கு உரிமை உள்ளது. குப்பைகளை சுமக்க தமிழகத்திற்கு கடமை உள்ளது.


பெரிய ராசு
பிப் 03, 2025 22:44

உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் யுவர் ஆனார் தயவு செய்து இந்த கனிமவள லார்ரி விதித்து பறிமுதல் செய்து ஏலம் விடுங்க எசமான் உங்களுக்கு கோடி புண்ணியம் சாமி


Rangarajan Cv
பிப் 03, 2025 22:40

In auction, same owner or related persons may bid for the vehicle?


K.n. Dhasarathan
பிப் 03, 2025 21:08

மிக மிக சரியான முடிவு, இதில் சற்றும் பின்வாங்காதீர்கள், கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும், எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காதீர்கள், ஐகோர்ட் தீர்ப்புக்கு நன்றி ஐயா


Ray
பிப் 03, 2025 19:52

இந்த உலகமே தமிழ்நாட்டுக்கு எதிராக பல்வேறு வகைகளிலும் செயல்படுகிறது வழிப்பறி சங்கிலி பறிப்பு வாகன திருட்டு வீடுகளில் திருட்டு வங்கி கொள்ளை ATM கொள்ளை ஆன்லைன் கொள்ளைகள் அண்டை மாநிலங்களின் இதுபோன்ற தொல்லை நெருக்கடி காவிரி முல்லை பெரியார் நீர் தாவாக்கள் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒன்றிய அரசின் அரசுக்கு எதிரான நெருக்கடிகள் நிதி / ரயில் சாலை திட்டங்கள் நிறுத்திவைப்பு முதலானவை இவையெல்லாம் போதாததற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஏகோபித்த எதிர்ப்பு போராட்டங்கள் சேற்றை வாரியிறைக்கும் போக்கு ஆட்சி ரி காட்சி மாறினால் நாடு நாறிடும்போது நம் மக்களுக்கு புத்தி வருமா? வராது எல்லாமே 2011 - 2021 போல கப் சிப் ஆகிவிடும்


Karthik
பிப் 03, 2025 19:10

பேசாம இந்த ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தால் எல்லா பிரச்சனையும் ஓவர் நைட்டுல சரியாகிடும் ஆனா பி ஜே பி ஒத்துக்காது.


Kundalakesi
பிப் 03, 2025 18:10

நீதிமன்றம் ஆட்சி தான் தமிழகத்தில் நன்றாக செயல்படுகிறது.


lana
பிப் 03, 2025 17:08

எங்க சுடலை soriyaar க்கு கேரள சேட்டன் கிட்ட பேசுவார். தமிழக நலன் என்றால் வாயில் கோந்து ஒட்டி கொள்ளும். குடும்ப நலம் என்றல் ஐ.நா வரை பேசும். ஆனா பாருங்க அவருக்கு பேசத் தெரியாது. அரசு வேலை எல்லாம் கோர்ட் செய்யும். மாடல் அரசு மாடலிங் மட்டுமே செய்யும்


PR Makudeswaran
பிப் 03, 2025 14:50

என்ன நிலைமை தெரியாமல் கருத்து? கேரளா கம்யூனிஸ்ட் அரசை திராவிட மாடல் அரசு இங்குள்ள மக்களுக்காக ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்? மு க முன்பு கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழ் நாட்டை வஞ்சித்து காவிரியை பாழாக்கவில்லையா? இப்பொழுது கேரள அரசை கண்டித்தால் குடும்ப டிவி வியாபாரம் என்ன ஆகும்? தமிழ் நாட்டு மக்கள் காசு வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் மாடல் அரசுக்கு ஓட்டு போட்டது எதற்காக?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை