உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு பணிந்தது கேரளா; மருத்துவ கழிவுகளை லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு

பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு பணிந்தது கேரளா; மருத்துவ கழிவுகளை லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர். கழிவுகளை நான்கு இடங்களில் லாரிகளில் ஜே.சி.பி., மூலம் ஏற்றி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற இரண்டு இடங்களில் விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ziae6dm1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தனர். 'திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர். மருத்துவ கழிவுகளை 11 லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நான்கு இடங்களில் கழிவுகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. அவை கீழே விழாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு லாரிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற இரண்டு இடங்களில் குப்பைகள் அகற்றி முடிக்கும் பணி ஓரிரு மணி நேரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட இடத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Sriram Ranganathan
டிச 23, 2024 05:19

இது அண்ணா மலைக்கு கிடைத்த வெற்றி. அவரால்தான் வேறு வழி இல்லாமல் அரசு நடவடிக்கை எடுத்தது


பெரிய ராசு
டிச 24, 2024 10:40

முற்றிலும் உண்மை


Sivagiri
டிச 22, 2024 22:27

இந்த பக்கம் திருநெல்வேலி பக்கம் அள்ளி கொண்டு போயி நாகர்கோயில் பக்கம் தட்டிராம பாத்துக்கணும் , அது போக , இந்த விவகாரம் பற்றி திருட்டு மாடல் தலைவர்கள் ஒருவர் கூட வாயை தொறக்கவில்லை , எதோ வேற ஸ்டேட்ல நடக்குற மாதிரியே போயிடறாங்க , , ,


Suppan
டிச 22, 2024 21:46

உருட்ட வேண்டாம். இருபது வருடங்களாக நடக்கிறது இந்தக்கூத்து. இரண்டு திருட்டு திராவிடக்கட்சிகளும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததா ?


sridhar
டிச 22, 2024 18:54

பதிலுக்கு நாம் கருங்கல் , மணல் , கனிமம் எல்லாம் அங்கே அனுப்பி அவங்களை கடுமையாக தண்டிக்கிறோம் .


sridhar
டிச 22, 2024 18:52

மாநில திமுக அரசு இது வரை எடுத்த நடவடிக்கை என்ன. அதே போல் தீவிரவாத செயல் நடந்தால் NIA தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திமுகவுக்கு தான் 2019 ல் இருந்து இன்றுவரை ஹிந்துக்கள் விழுந்து விழுந்து வாக்களிக்கின்றார்கள் .


Ram pollachi
டிச 22, 2024 18:12

கேரளாவில் இருந்து குளிரூட்டப்பட்ட கடல் மீன்களை கொண்டு செல்லும் வாகனங்களின் கழிவு நீர் தொட்டிகள் அங்கே மூடி வைப்பார்கள் அடுத்த மாநில எல்லைக்கு வரும் போது திறந்து விடுவார்கள் சாலை முழுவதும் அதன் துர்நாற்றம் தாங்க முடியாது. இதை தயவுசெய்து கவனித்து பாருங்கள் நண்பர்களே!


Ram pollachi
டிச 22, 2024 17:49

திருப்பி கொண்டு செல்லும் கழிவுகளை எப்படி அழித்தார்கள் என்பதன் ஆதாரம் வீடியோவாக பதிவு செய்து தீர்ப்பாயத்திடம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்... போகும் வழியில் 20 அடிக்கு ஒரு மூட்டையை தூக்கி எறிந்துவிட்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம் இதை தான் கோவை, பொள்ளாச்சி, உடுமலை தேசிய நெடுஞ்சாலைகளில் செய்கிறார்கள்.


N Srinivasan
டிச 22, 2024 15:30

கேரளத்தில் இருந்து இந்த கழிவுகளை அனுப்பிய மருத்துவமனைகளை சோதனை செய்து அங்கே அவர்கள் கழிவுகளை பதப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளார்களா என்ற சோதனை செய்ய வேண்டும். அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி மூலமாக இது நடக்க வேண்டும். இல்லையேல் இது ஒரு தொடர்கதைதான்


Suppan
டிச 22, 2024 15:26

நாங்கள் உ பி. கள் ரூபாய் இருநூறு வாங்கிக்கொண்டு விடியலுக்கு ஆதரவு கொடுப்போம். எங்கள் விலை அதுதான் ஹி ஹி


G.Kirubakaran
டிச 22, 2024 13:37

மருத்துவ கழிவுகளை ,கொண்டு வந்து கொட்டும் வரை தமிழக போலீஸ் , என்ன செயது கொன்டு இருந்தது


முக்கிய வீடியோ