உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு கொலை வழக்கு; இ.பி.எஸ்., சசிகலாவிடம் விசாரிக்க ஐகோர்ட் அனுமதி

கோடநாடு கொலை வழக்கு; இ.பி.எஸ்., சசிகலாவிடம் விசாரிக்க ஐகோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இ.பி.எஸ்., மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா ஆகியோரை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' என சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dpxs5q3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017ல் புகுந்த கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் உள்ளிட்டோரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் எஸ்டேட் மேலாளரை மட்டும் விசாரிக்க, நீலகிரி நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சார்பில், இ.பி.எஸ்., சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை இன்று(டிச.,06) நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது: இ..பி.எஸ்., முதல்வராக இல்லாததால் எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது? இ.பி.எஸ்., மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்க தடை விதித்த நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
டிச 06, 2024 22:56

2017 நடந்த கொலை. இன்னும் விசாரணையே துவங்க வில்லையா? அப்படி என்றால் தீர்ப்பு என்றைக்கு வரும்? தீர்ப்பு வரும் அன்றைக்கு, இன்று இருக்கும் பல பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை?


Sudha
டிச 06, 2024 21:27

குற்றவாளிகள் வேறு 2 பேரையும் விசாரிக்க கூறுகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஒரு திமுக பிரமுகரை கை காட்டியிருந்தால் ? குற்றப்பத்திரிகையில் இல்லாத ஒருவரை குற்றவாளி சொன்னால் விசாரிக்க எடுத்து kolveeppargalaa?


ஆரூர் ரங்
டிச 06, 2024 17:04

அதாவது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். போலீஸ் ஸ்டேஷனில் அல்ல. விசித்திரம்.


RAAJ68
டிச 06, 2024 16:02

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் வாக்குறுதி என்ன ஆயிற்று. அது போல் கொடநாடு கொலை வழக்கும் விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துகிறார்கள். செத்துப்போன சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு யாருக்கோ சாதகமாக செயல்படுகிறது நீதித்துறை.


Bala
டிச 06, 2024 15:39

எட்ப்பாடிக்கு பிடித்தது சனி.


Palanisamy Sekar
டிச 06, 2024 15:06

இவ்வளவு நாட்களாக இந்த விசாரணை வேண்டாமே என்றுதானே எதிர்க்கட்சியின் பணியை கூட செய்யாமல் வாய்மூடி அமைதி காத்தார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இப்போ என்னடா இது சோதனை. மூன்றே மாதங்களில் விசாரணையை முடித்து எடப்பாடியை ஜெயிலில் தள்ளுவேன் என்று சொன்ன ஸ்டாலின் இப்போதுதான் இதுபற்றி தூசி தட்டி கோர்ட்டில் அனுமதி வாங்கியிருக்கார். பாவம் அப்பாவி காவலாளிகளை கொலை செய்த நபர்களை விடவே கூடாது. இவர்களின் அரசியல் சதுரங்கத்தில் அப்பாவிகளின் ஆன்மா இன்னும் அமைதியாக இருக்கின்றது. காலம் யாரையும் விட்டுவைத்ததே கிடையாது. கர்மா என்பது சனாதனத்தின் நம்பிக்கை. நம்பாதவர்களுக்கு பாடம் புகட்டும்போது தெரியவரும்.


அப்பாவி
டிச 06, 2024 15:04

இதெயெல்லாம் தாமாகவே வந்து விசாரிக்கிற ஒருத்தர் வந்து விசாரிக்க மாட்டாரா? இனிமே இந்த கேசை எப்போ எறக்கு, எப்போ பூட்டி... 2026 எலக்‌ஷன் வந்துருமே கிவாலு


karutthu kandhasamy
டிச 06, 2024 16:06

தாமே வந்து விசாரிக்க ஆர்வம் கட்டியயவரை தான் ஓரம் கட்டிவிட்டார்களே பிறகு எப்படி முன்வருவார் சரியான, மேல்முறையீடு செய்யமுடியாத தீர்ப்பு கடவுளின் கோர்ட்டிலிருந்து வந்தால் தான் உண்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை