உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி யூனியன் பிரதேசம்; கூகி இனத்தவர் கோரிக்கை

தனி யூனியன் பிரதேசம்; கூகி இனத்தவர் கோரிக்கை

புதுடில்லி : 'மணிப்பூரில் போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளை தவிர்க்க, தனி யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும்' என, அங்குள்ள கூகி இனத்தவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி - மெய்டி இனத்தவர் இடையே 2023ல் மோதல் வெடித்தது. இதையடுத்து, ஒரு ஆண்டு காலமாக நீடித்த வன்முறை சம்பவங்களுக்கு, 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தலைநகர் டில்லியில் மணிப்பூரில் உள்ள கூகி - சோ மகளிர் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சோங் ஹோகிப் நேற்று கூறியதாவது:மணிப்பூரில் பிரச்னைகள் சற்று ஓய்ந்திருந்தாலும், கூகி இனத்தவருக்கு பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன.இதை தவிர்க்க, சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் கூகி மக்களுக்கென தனியாக அமைவது அவசியம். இது எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல; இது கூகி மக்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பு உரிமையை உறுதி செய்வதற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகும். இந்தக் கோரிக்கையை அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. மாறாக பாதுகாப்பு மற்றும் அமைதிக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்க வேண்டும்.கூகி - சோ பழங்குடியினர் இம்பாலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளைப் போல கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் எதிரிகளைப் போல நடத்தப்பட்டோம். எங்கள் அடையாளம் காரணமாக நாங்கள் கொல்லப்பட்டோம். பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் தலையிடவில்லை. அரசும் எங்களை காப்பாற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Radhakrishnan Seetharaman
ஜூன் 01, 2025 20:23

மெய்ட்டி இனத்தவர்கள் தான் இந்தியர்கள். குக்கி இனத்தவர் வந்தேறிகள். இவர்களுக்கு எதற்கு நம் நாட்டில் இடம்?


Bhaskaran
ஜூன் 01, 2025 12:02

தேசிய இனங்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும்


Kulandai kannan
ஜூன் 01, 2025 11:50

மிஷநரிகளின் சில்மிஷம்.


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 07:03

காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்கு தனி யூனியன் பிரதேசம் எவன் கொடுப்பான் என்று மதம் மாற்றிகள் பதில் சொல்லட்டுமே? வேண்டும் என்றால் இவர்கள் வோட்டுக்கு திராவிட கனி அக்கா இவர்களுக்கு ஆதரவாக கவர்னரை எதிர்த்து மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார்...


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 07:00

பங்களாதேஷ் மியான்மரிலிருந்து போதை பொருள் கடத்துவதற்கு கஞ்சா செடிகள் நடுவதற்கு தனி யூனியன் பிரதேசம் கொடுக்க முடியாது. அப்படி தேவை என்றால் மதம் மாற்றிகள் இங்கிருந்து பங்களாதேஷ் மியான்மருக்கு இடம் பெயர்ந்து செல்லலாம்..


m.arunachalam
ஜூன் 01, 2025 05:58

மிகவும் நல்ல கோரிக்கை . பரிசீலித்தால் நலம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை