உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.'கோகைன்' போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், நண்பர்களுக்கும் கொடுத்த நடிகர் கிருஷ்ணாவும், அவருக்கு கோகைன் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், எனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு உள்ளேன். நான் தான் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறப்பட்டு உள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

tamilvanan
ஜூன் 28, 2025 03:23

எனக்கும் இது அந்தகமாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் போதை அடிமையாக இருக்கலாம். அதற்காக கைது செய்யப்படவேண்டிய அளவு என்ன குற்றம் செய்து விட்டார்கள்? வீட்டிலோ, வெளியிலோ யாரிடமாவது உரண்டை இழுத்தார்களா? யாராவது இதை பற்றி போலீசுக்கு கம்பிளைன்ட் செய்தார்களா? ஒன்றும் இல்லையே. போதை மருந்தை தடுக்க, அந்த மாதிரி மருந்தை விரவாரகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்தை வாங்கி பயன்படுத்துபவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பலாம். கைது செய்வது தவறு. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதே.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:32

இதிலிருந்து என்ன தெரிகிறது, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சென்னை மாநகரம் போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்று தெரியவில்லையா உங்களுக்கு? இதற்கு எப்படி பதில் கூறப்போகிறார் நமது தலைவர் அப்பா ஸ்டாலின் அவர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை