உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிசை ஜெயபாரதி காலமானார்!

குடிசை ஜெயபாரதி காலமானார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி இன்று (டிச.,06) காலமானார். அவருக்கு வயது 77.எழுத்தாளரும், இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, இன்று காலை 6 மணிக்கு காலமானார்.கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'குடிசை' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. பத்திரிகையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். வணிக சினிமா எடுக்க விரும்பாமல், யதார்த்தமான கதைகளைக் கொண்ட மாற்று சினிமா மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர். இவரது இயக்கத்தில் 'குடிசை', 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு',உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவர் இயக்கிய குடிசை படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது; பல்வேறு விருதுகளையும் பெற்றது.கடைசியாக 2010ம் ஆண்டு 'புத்திரன்' என்ற படத்தை இயக்கினார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

எவர்கிங்
டிச 06, 2024 20:25

தேசத்தின் வறுமையை படம்பிடித்து வயிறு வளர்த்தவர்


Ramesh Sargam
டிச 06, 2024 13:03

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி .


Sampath Kumar
டிச 06, 2024 09:00

தமிழ் சினிமாவின் ஒரு தரமான இயக்குனர் தரம் என்றால் என்னாது யதார்த்தத்தின் குணம் கொண்டது என்பதை தமிழ் சினிமாவிற்கு காட்டிய நல்ல இயக்குனர் அவரின் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுக்கின்றேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை