நெல் மூட்டைகளுக்கு குடோன் பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை:'செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால், அவற்றை பாதுகாக்க குடோன்கள் அமைக்க வேண்டும்' என, தமிழக அரசை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த, 7,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. நெல் மூட்டைகளை பாதுகாக்க, குடோன்கள் இல்லாததால், அவை மழையில் நனைந்துள்ளன. இதனால், நெல் மூட்டைகள் விலை வீழ்ச்சி அடையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.அதேப்போல், தர்பூசிணியல் கலப்பட சாயம் கலப்பதாக சர்ச்சை எழுப்பியதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத, துரித உணவுகள் அதிகமாக உள்ளன. அதை எல்லாம் விட்டு விட்டு, விவசாயிகள் தோட்டத்தில் இயற்கையாக விளைவிக்கும் தர்பூசணியில் சாயம் கலந்ததாகக் கூறி, அவற்றை சாப்பிடக்கூடாது என்பது, எந்த விதத்தில் நியாயம். விவசாயிகளை காக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, தமிழக அரசு, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, குடோன்கள் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.