உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குன்றம் தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன்

 குன்றம் தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது, மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகளாகியும்கூட நிறைவேற்ற தி.மு.க.,வுக்கு மனமில்லை. ஜாக்டோ ஜியோ ஜன.,6 முதல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். சத்துணவு ஊழியர்களும் சேர்ந்து போராட உள்ளனர். போராட்ட அரசாக இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு தேர்தலில் வரும். தைப்பொங்கல் முடிந்த பின்பு கூட்டணி குறித்து சொல்ல முடியும். தற்போது இருக்கும் கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும். இன்னும் பல கட்சிகள் வந்தால் இன்னும் பலமான கூட்டணியாக அமையும். குஜராத்தை தொடர்ந்து தற்போது காசி தமிழ்ச்சங்கமத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். அதற்கு சிறப்பு ரயில், தனி பஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. காசி தமிழ்ச் சங்கமம் வெறும் மாநாடு மட்டுமல்ல. அவர்கள் தென்காசியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், புதுச்சேரி, ஐதராபாத் என தமிழ் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் உள்ள இடங்களை பார்த்துவிட்டு இறுதியாக காசி தமிழ்ச் சங்கமத்திற்கு செல்கிறார்கள். நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. இவ்வாறு தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரதமரை, முதல்வர் தொடர்ந்து விமர்சிக்கிறார். பா.ஜ., வுடன் வந்தால்தான் விஜய்க்கு பாதுகாப்பு என தமிழிசையின் கருத்து நல்ல கருத்து. கரூரிலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. அதைத்தான் அவர் கூறி இருக்கிறார். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தது மிகப்பெரிய தவறு. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், நீதிபதிகள் மீது 'இம்பீச்மென்ட்' கொண்டு வந்தது மோசமான முன்னுதாரணம். திருப்பரங்குன்றம் தீப பிரச்னை ஒவ்வொரு மக்கள் மனதிலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. திருப்பரங்குன்றத்தின் புனிதம் கெடக்கூடாது என்பதற்காக பூர்ணசந்திரன் தீக்குளித்தார். எவரும் இதுபோன்ற காரியத்தை செய்யக்கூடாது. அதே சமயம் தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. அதனடிப்படையில் அங்குள்ள பெண்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். வெளியூரிலிருந்து வருபவர்கள் சிக்கந்தர் மலை என்று சொல்வதும், பிரியாணி எடுத்து வருவதும் தி.மு.க.,வினரால் பரப்பி விடப்பட்ட செயல். ஓட்டு வங்கிக்காக இப்படி நடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sugumar s
டிச 28, 2025 15:11

I saw lot of news that both muslims and hindus were brothers in thiruparamkundram area. only dmk and sekar babu company wants to communal feud to restrict hindus rights. in order achieve dmk objective they took help of some muslim organization to fight against hindus. by this dmk feels they will satisfy muslims and get votes in 2026. dmk forgot the basic fact that hindus votes are majority. they think 2000, quarter and biriani will suffice hindus. if hindus have self respect they should defeat dmk in 2026 and for ever.


Balasubramanian
டிச 28, 2025 13:50

அருள்மிகு முருக பெருமான் பற்றி செவ்வேள் என்ற தலைப்பில் சங்க தமிழ் நூலான பரிபாடல் 5 வரிகள் 78-81 வருபவை யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பினொலி தாரோயே! கடம்ப மலர் மாலை அணிந்த முருக பெருமானே, யாம் உன்னிடம் இரப்பவை பொன்னும் பொருள்களும், இன்ப நுகர்ச்சியல்ல! எமக்கு தேவை வீடு பேறு தரும் நினதருளும் அதனை உண்டாக்க உன்னிடத்து யாம் செய்யும் அன்பும் அதனால் வரும் அறனும் ஆகிய இம் மூன்றுமே, அருள் புரிவாயாக! என்று அன்பும் அறனும் வேண்டி அமைதி காக்கும் இந்துக்களை காக்க அந்த முருகன் தான் இறங்கி வர வேண்டும்


தஞ்சை மன்னர்
டிச 28, 2025 13:00

அதை அனையவிடாமல் பார்த்துக்கொள்ளத்தானே பி சே பி உங்களை நியமித்து இருக்கு


திகழ்ஓவியன்
டிச 28, 2025 12:40

என்ன இருந்தாலும் ஸ்டாலின் மாஸ் தான்


Rathna
டிச 28, 2025 12:13

ஒரு நடுநிலையாளராக, பிஜேபி இந்த பிரச்னையை அரசியல் அளவில் சரியாக பயன்படுத்த வில்லை என்பது போல தான் தெரிகிறது. இதையே பயன்படுத்த தெரியாவிட்டால் பிஜேபி இன்னும் 200 வருடம் தமிழகத்தில் வர வாய்ப்பே இல்லை. பிஜேபி இல் உள்ள சினிமா கூட்டங்கள் எங்கே. மற்ற முதல் கட்ட தலைவர்கள் எங்கே இந்த பிரச்னையை பற்றி எங்கே போராட்டம் நடத்துகின்றனர். பேசுகிறார்கள்?


Rathna
டிச 28, 2025 12:04

திருப்பரம்குன்றம் நக்கீரரின் தாகத்தை நீக்க முருகன் தனது வேலால், குன்றை குடைந்து குடிக்க தண்ணீர் வழங்கிய தலம். முருகன் தமிழ் கடவுள். தொல்காப்பியம் தொடங்கி, அகத்திணை, புறநானூறு, நக்கீரரின் முருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் அவனது பெயர், வழிபாடு குறிக்கப்பட்டுள்ளது. சேர நாட்டு மலையாளிகள் முதல் தொண்டை நாட்டு ஆந்திர மக்கள் வரை அவனை குல தெய்வமாக வணங்குகின்றனர். 1335 - 1378 வரை, 43 வருடம் மதுரை ஆப்கானிய படையெடுப்பாளர்களால் ஆளப்படுகிறது. அதன் கடைசி கவெர்னர் தான் சிக்கந்தர் பாஷா என்னும் ஆப்கானியன். அவன் செய்த கொடுமைகளால், ஏழ்மையும் பல கொலைகளும் மதுரை மாநகரில் தினமும் நடந்தது. அது பெண்களுக்கு அவர்கள் மானத்திற்கு எதிரான மிக கொடுமையான ஆட்சியாக நடந்தது. இளம் பெண் குழந்தைகள் கூட அதிலிருந்து தப்பவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 40 வருடத்திற்கு மேல் மூர்க்க கூட்டத்தால் மூடப்பட்டது. மதுரை கோரி பாளையம் போன்ற சில பகுதிகள் கோரி முஹம்மதுவின் வழி வந்த சிக்கந்தர் பாஷா போன்ற ஆப்கானிய படையெடுப்பாளர்கள் வரலாற்று கொடுமைகளின் எச்சம். அவன் விஜய நகர தளபதி கம்பண்ண உடையார் என்பவர் படைகளுக்கு பயந்து, திருப்பரங்குன்றம் மலையில் மறைந்து இருந்த போது கொல்லப்படுகிறான். 14 ம் நூறாண்டில் தமிழ் ஹிந்துக்கள் குடும்பத்தில் உள்ள ஒவருவருக்கும் தலைவரி கொடுத்து வாழ்ந்த கொடுமையான நிலை பலருக்கு தெரியாது. நில வரியில் ஹிந்துக்களுக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. அந்த வரியை கொடுக்க முடியாதவர்கள் வீடு பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தப்பட்டனர். வீடு தலைவனின் தலை வெட்டப்பட்டு அவரது தலைகள் தென்னை மரத்தில் தொங்க விடப்பட்டது. இது விஜய நகர அரசி கங்கா தேவியின் மதுர விஜயம் என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் பழைய தலவரலாற்று புத்தகத்திலும் நடந்த கொடுமைகள் அனைத்தும் எழுதப்பட்டு உள்ளது.


Vasan
டிச 28, 2025 15:52

தற்போதைய ஆட்சிக்காரர்கள் சிகந்தர் பாஷாவே தேவலாம் என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.


சத்யநாராயணன்
டிச 28, 2025 10:03

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி தான் தொடர வேண்டும் என்று அமித்ஷா எப்பொழுதும் முடிவு செய்துவிட்டார் அதை இன்னுமா நீங்கள் மாற்றப் போகிறீர்கள் ஏதோ பேசி காலத்தை ஓட்டுங்கள்


நாடோடி
டிச 28, 2025 09:46

நீங்களெல்லாம் உங்க மனசாட்சி படி வளத்தாலே நடந்து கொண்டாலே இங்கு மக்கள் அனைவருமே எந்த பிரச்சினையும் இல்லாமலும் சண்டையிட்டு கொள்ளாமலும் வாழ்வார்கள், கோவில் பள்ளிவாசல் சர்ச் இப்படி எல்லா இடமும் பாத்தட்டமாக இருப்பதற்கு காரணமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் தான்


arumugam mathavan
டிச 28, 2025 09:36

முருக பக்தர்கள் மற்றும் இறை நம்பிக்கையுள்ள யாரும் தி குன்று தீப தீதிமன்ற அவமதிப்பை மண்ணிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள். உறுதியாக 2026தேர்தலில் முருகனின் சம்ஹாரம் நடக்கும். வெற்றி வேல் வீர வேல்


முருகன்
டிச 28, 2025 09:20

உங்கள் மனதில் இருப்பதை மக்கள் மனதில் என பேசுவது ஏன்


vivek
டிச 28, 2025 10:53

அவர் மக்கள் மனதில் உள்ளதைதான் சொல்கிறார்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை