உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலவர பூமியானது பரமக்குடி : பெண் போலீஸ் மானபங்கம்

கலவர பூமியானது பரமக்குடி : பெண் போலீஸ் மானபங்கம்

பரமக்குடி: பரமக்குடியில் நடந்த கலவரத்தில், பெண் போலீஸ் டெய்சி, மானபங்கம் செய்யப்பட்டார். ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், போலீசார் பற்றாக்குறையால், நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள், பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும், ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட்-கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்து, ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.கலவரத்தில் பெண் போலீஸ் டெய்சி என்பவரின் சீருடையை கலவரக்காரர்கள் கிழித்து மானபங்கம் செய்தனர். இதனால், தப்பி ஓடிய அவர், அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சமடைந்தார். வீட்டிலிருந்தவர்கள் மாற்று உடை கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி