உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி

செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி

தேனி : ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் செயல் வழி கற்றல் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்திற்கேற்ப அட்டைகளை மாற்றி அமைத்து கற்றுத் தரவும், சில திருத்தங்களை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி ஒளிபரப்பு செயற்கைகோள் மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மை செயலர் ஜெயஸ்ரீ உத்தர விட்டுள்ளார். அதன்படி ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆசிரியர்களுக்கு இதற்காக சிறப்பு பயிற்சி நாளை (ஆக. 27ல்) நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை