உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்.இ.டி., திரையில் தீர்ப்பு விபரம் சென்னை ஐகோர்ட்டில் புதிய வசதி

எல்.இ.டி., திரையில் தீர்ப்பு விபரம் சென்னை ஐகோர்ட்டில் புதிய வசதி

சென்னை:வழக்குகளில் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, உடனே பெரிய திரையில் பார்க்கும் வகையிலான வசதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வது, வாதாடுவது போன்றவற்றுக்கு, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக வழக்குகளை தாக்கல் செய்யவும், வாதாடவும் முடியும். இதில் வழக்கறிஞர்கள், பொது மக்கள், நீதிமன்ற உத்தரவுகளை பெறுவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப, இதிலும் தற்போது பல்வேறு மாற்றங்களை, நீதித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. கீழமை, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவு, தீர்ப்புகளை, எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும். நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, வழக்கு தொடர்ந்தவர், வழக்கறிஞர்கள் உடனே அறிந்து கொள்ளும் வசதியை, சென்னை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, உடனடியாக திரையில் எழுத்து வடிவில் அறிய முடியும்.நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவை, சுருக்கெழுத்தர் குறிப்பெடுத்து, அதை தட்டச்சு செய்து, நீதிபதி அதை சரிபார்த்து கையெழுத்திட்ட பின், இணையதளத்தில் பதிவேற்றும் நடைமுறை தற்போது உள்ளது.முக்கிய வழக்குகளில் பிறப்பிக்கப்படும் முழு உத்தரவுகளை அறிய, பொது மக்கள், வழக்கறிஞர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இவற்றை எளிமையாக்கும் வகையில், நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு குறித்த விபரங்கள், நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட பெரிய எல்.இ.டி., திரையில் எழுத்து வடிவில் தெரியும். இந்த வசதியை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தன் நீதிமன்ற அறை எண் 33ல் அறிமுகம் செய்துள்ளார்.அங்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், பொது மக்கள், தங்கள் வழக்கில் நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளை, உடனே பெரிய திரையில் எழுத்து வடிவில் பார்க்க முடியும்.இது, அந்த நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை