போலி கடிதம் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை
சென்னை:பா.ஜ., தேசிய தலைவருக்கு, தான் எழுதியதாக போலியான கடிதத்தை பரப்பிய நபர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., தலைமை மீது குற்றம் சுமத்தி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, எச்.ராஜா எழுதியது போன்ற போலி கடிதம், நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து ராஜா வெளியிட்ட அறிக்கை:என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு, சமூக விரோதிகளால் தவறான தகவல்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த போலி தகவலை தயார் செய்து பரப்பியவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய்யான தகவலை யார் பரப்பினாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.