உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை முதல்வர் உணரட்டும்

தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை முதல்வர் உணரட்டும்

'தமிழ்நாட்டின் பெயர் கூட மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லையே. இது ஓரவஞ்சனை, தமிழகத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்திருக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின், சிறப்பான மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக அங்கலாய்த்திருக்கிறார். ஆண்டுதோறும் தமிழகத்துக்காக போடப்படும் தமிழக பட்ஜெட்டில் கூட 'இந்தியா'வின் பெயரை எங்கும் சொல்வதில்லையே. அதற்காக இந்தியாவை, தமிழக அரசு முழுமையாக புறக்கணித்து விட்டது என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் அது எந்த அளவுக்கு மலிவு அரசியலோ, அதே அளவுக்கான மலிவான அரசியல் தான் ஸ்டாலினின் வாதமும். இந்தியாவின் ஓர் அங்கம் தான் தமிழகம் என்பதை உணர மறுக்கும் எண்ணத்தின் விளைவுதான் இப்போதைய நிலைமை. இனியாவது, இந்தியாவின் ஒரு அங்கம் தான் தமிழகம் என்பதை முதல்வரும், அவர் கட்சியைச் சேர்ந்தோரும் உணர வேண்டும். அதன் வழியில் நடக்க வேண்டும். நாராயணன் திருப்பதி,துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி