உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளி விழாவை கொண்டாடுவோம்!

வெள்ளி விழாவை கொண்டாடுவோம்!

சென்னை:'கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன், 25வது ஆண்டு விழாவை கொண்டாடுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கடந்த 2000மாவது ஆண்டு, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் 25 ஆண்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நம் நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து, 25 ஆண்டுகள் ஆகின்றன. மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு, கருணாநிதி அமைத்த சிலையை, ஞானத்தின் சிலையாக கொண்டாடுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை