உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கில் ஏதாவது ஒரு வெற்றியை சொல்லுங்கள் பார்க்கலாம்? பொருளாதார குற்றப்பிரிவிடம் ஐகோர்ட் கேள்வி

வழக்கில் ஏதாவது ஒரு வெற்றியை சொல்லுங்கள் பார்க்கலாம்? பொருளாதார குற்றப்பிரிவிடம் ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வரலாற்றில், நிதி மோசடி வழக்கில் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக ஏதாவது ஒரு சம்பவம் உண்டா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த, 100க்கும் மேற்பட்ட முதலீட்டார்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உட்பட ஆறு பேரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெயசந்திரன் முன் நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தேவநாதனுக்கு ஜாமின் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும்' என, பொருளாதார குற்றப்பிரிவு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'ஓராண்டுக்கு மேல் தேவநாதனை சிறையில் அடைத்து வைத்துள்ள போதிலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில், வழக்கை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்ததாக ஒரு வழக்கையாவது கூறுங்கள்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார். பின், தேவநாதன் தரப்பில், 'ஆறு வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கினால், சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என்று, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'தேவநாதன் தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விபரங்களை, வரும் 25ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 'இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து, அன்றைய தினம் முடிவெடுக்கப்படும்' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஆக 19, 2025 16:41

சட்டம் இந்த அளவுக்கு எளிமையாக ஒரே சட்டமாக மாற்றப்படவேண்டும் "தவறு கண்டேன் சுட்டேன்" "கற்பழித்தான் ஆண்மை குறி அறுக்கப்பட்டது" "கொலை செய்தான் அவன் இரண்டு கைகளும் அறுக்கப்பட்டது" "ஊழல் செய்தான் கொள்ளை அடித்தான், அவன் சொத்துக்கள் யாவும் அரசுடமை ஆக்கப்பட்டது அவனது நாக்கு அறுக்கப்பட்டது" கேட்பதற்கு காட்டுமிராண்டித்தனமாக இருக்கலாம். உடனே இந்த தீய செயல்கள் நின்று விடும்.


Kalyanaraman
ஆக 19, 2025 08:45

ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை குற்றவாளிகள் பெருகிக்கொண்டே இருப்பார்கள் .ஏமாற்றுபவர்கள் மேலும் ஏமாற்றுவார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையே இந்த கையாலாகாத நீதிமன்றங்களும் நமது சட்டங்களும் தான் என்றால் மிகை இல்லை.


Iniyan
ஆக 19, 2025 06:37

நீதிமன்றங்கள் குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கும்போது எப்படி இது நடக்கும். அயோக்கிய நீதி மன்றங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை