உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சு.வெங்கடேசன் எம்.பி., பதவியை பறிக்க சபாநாயகருக்கு கடிதம்

சு.வெங்கடேசன் எம்.பி., பதவியை பறிக்க சபாநாயகருக்கு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி தனபால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசனை பதவி நீக்கம் செய்யக்கோரி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஹிந்து மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் 9ல் மதுரையில் நடந்த மதநல்லிணக்க மாநாட்டில் எம்.பி., வெங்கடேசன் பேசினார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் சீர்குலைக்கும் வகையில், இது தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அசிங்கம், முட்டாள், அயோக்கியன் என தரக்குறைவான கீழ்த்தரமான வார்த்தைகளாலும், ஒருமையிலும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது நீதிமன்றத்தையும், நீதிபதியையும் களங்கப்படுத்தும் செயல். மக்கள் பிரதிநிதியான அவர், இப்படி பேசியது, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அவரை எம்.பி., பதவியில் இருந்து, மக்கள் பிரதிநிதித்துவ பாதுகாப்பு சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

B MAADHAVAN
மார் 23, 2025 10:43

நீதிமன்றத்தையும், நீதிபதியையும் தரக் குறைவாக பேசியவரை கண்டித்து நன்மக்கள் போராடுகிறார்கள் என்ற செய்தி கேட்டு சந்தோஷம். சம்பந்தப்பட்ட நீதிபதியோ அல்லது அவர்களது அமைப்பினை சேர்ந்த மற்ற நீதிபதிகளோ குரல் கொடுக்க வில்லை என்பதன் அர்த்தம் என்னவோ....


MUTHUKRISHNAN
மார் 21, 2025 22:03

தமிழ் மக்களை மொழி, திராவிடம், இந்து மத அழிப்பு என்று சொன்னால், ஒரு quarter குடித்துவிட்டு வோட்டை போடுவார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார். மக்களும் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கிறார்கள்...


கம்பி கட்டும் கம்மிகள்
மார் 21, 2025 08:01

ஊபி ஆக மாறிய தருணம்...


c.mohanraj raj
மார் 21, 2025 06:56

அதுதான் சரியான நடவடிக்கை இவன் எப்பொழுதுமே மக்கள் பிரச்சனைக்காக பேசியதில்லை


ramesh
மார் 21, 2025 06:55

ஓவரா பேசுறார் இந்த ஊ (எம்) பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை