மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி நகரிலுள்ள டோல்கேட்டை இடமாற்ற முடிவு?
10-Aug-2025
புதுடில்லி:காப்பீடு பாலிசி பிரீமியம் கட்டாமல் விட்டவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை எல்.ஐ.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, எல்.ஐ.சி., தரப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: ஐந்து ஆண்டுகளுக்குள் கடைசி பிரீமியத்தை கட்டாமல் விட்டிருந்தால், அந்த பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு விடுபட்ட பிரீமியத்தை அக்., 17ம் தேதிக்குள் கட்டினால், காப்பீடு பாலிசிக்கு புத்துயிர் அளிக்கப்படும் பாலிசி பிரீமியத்துடன், 30 சதவீத தள்ளுபடியில் காலதாமத கட்டணமும் செலுத்த வேண்டும் குறைந்த வருவாய் பிரிவினரின் சிறிய தொகை பாலிசி திட்டங்களுக்கு, காலதாமத கட்டணம் ரத்து காப்பீடு பாலிசியின் முதிர்வு தேதி, காலாவதி ஆகாமல் இருக்க வேண்டும் கடந்த 2020ல் பாலிசி எடுத்து, தற்போது வரை பிரீமியம் கட்டாதவர்கள் இந்த சலுகை பெறலாம் புதுப்பிக்கப்படும் பாலிசிகளுக்கு, திட்டத்தில் கூறப்பட்ட பலன்கள் மீண் டும் பொருந்தும்.
10-Aug-2025