உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி

மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி, வயலில் வேலை செய்த கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் இறந்தனர்; ஒருவர் காயமடைந்தார். அரியலூர் மாவட்டம், மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குப்புசாமி, 59, சுந்தரம் மனைவி எழிலரசி 20, ராமு மனைவி மல்லிகா, 48. இவர்கள் மூவரும் நேற்று, மேலணிக்குழி பகுதியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மூவரும், அருகில் இருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கி குப்புசாமியும், எழிலரசியும் சம்பவ இடத்தி@ல@ய இறந்தனர். படுகாயமடைந்த மல்லிகா, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மின்னல் தாக்கி இறந்த எழிலரசிக்கு திருமணமாகி, ஒரு ஆண்டு ஆகிறது. 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை