உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவிகளை தக்கவைத்துக் கொள்ள கட்சி மாறும் ஊராட்சி தலைவர்கள்

பதவிகளை தக்கவைத்துக் கொள்ள கட்சி மாறும் ஊராட்சி தலைவர்கள்

முதுகுளத்தூர் : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, ஊராட்சி தலைவர்கள் தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள, கட்சி மாறிவருகின்றனர். ஊராட்சி தலைவர்கள், தேர்தலில் கட்சி பேதமின்றி போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். பதவிக்கு வந்தவுடன், ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்தால் தான், ஊராட்சியில் மக்கள் நல திட்டங்களை தொய்வின்றி அமல்படுத்த முடியும். தற்போது, தமிழகத்தில் புதிய ஆட்சியில் நடுநிலையான மற்றும் பதவி சுகத்துக்காக உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்களை ஆளும்கட்சி ஆதரவாளர்கள் போல அடையாளம் காட்டிக் கொள்ள கரை வேட்டி, துண்டுகளையே மாற்றிக் கொண்டுள்ளனர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் தங்களையே தேர்ந்தெடுக்கும் வகையில், ஆயத்த பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பலர், ஆளும்கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை