உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாசமாக பேசிய நிருபர்: மன்னிப்பு கேட்க வேண்டுமென அண்ணாமலை ஆவேசம்

ஆபாசமாக பேசிய நிருபர்: மன்னிப்பு கேட்க வேண்டுமென அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர், பா.ஜ., தொண்டரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'அந்நிருபர் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' எனக் கூறினார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் அண்ணாமலை நேற்று (ஏப்,8) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது, தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர் பா.ஜ., தொண்டர் ஒருவரை கெட்ட வார்த்தையால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பை புறக்கணித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fg49wm0s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தாயை இழிவுப்படுத்தும் வகையிலான அந்த கெட்ட வார்த்தையை கூறியதற்காக குறிப்பிட்ட நபர் எங்கள் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட மன்னிப்பு கேட்கவில்லை எனில், பல்லடம் போலீசில் நானே புகார் அளிப்பேன். மன்னிப்பு கேட்கும் வரை நிருபர்களிடம் பேட்டி அளிக்க மாட்டேன்'' எனக் கூறி புறக்கணித்து சென்றார்.முன்னதாக பிரசாரத்திற்கு செல்லும்போது அண்ணாமலையின் பிரசார வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் வருவதாக கூறி, அண்ணாமலை கோபமடைந்தார். அப்போது, ''மக்கள் ஓட்டு போடுகிறார்கள்.. நான் மக்களை பார்க்கிறேன். நீங்க உங்க டிவியில் போட்டுதான் நான் ஜெயிக்கணும்னு கிடையாது, புரிஞ்சுக்கோங்க'' எனக் கூறிவிட்டு அண்ணாமலை தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை!

கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை. விளையாட்டு மைதானம் தேவை தான், ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும். பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கோவையில் தி.மு.க., தங்கச்சுரங்கத்தையே கொட்டினாலும் பா.ஜ., தான் வெற்றி பெறும். நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தி.மு.க.வினர்தான் உண்மையான திருடர்கள். பணத்தை பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை ஒரு கட்சிக்கு இல்லையென்றால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

மருத்துவ பரிசோதனை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவர் சுயநினைவோடு தான் பேசுகிறாரா? தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்?. கமல் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

RRatz
ஏப் 11, 2024 23:06

Mr Annamalai should concentrate on electioneering and not to waste time with third rated money based Journalist


Sathishkumar.N
ஏப் 10, 2024 15:12

மன்னிப்பு கேக்க முடியாது என்று சொல்கிறார்கள்


Chandra Sekhar
ஏப் 10, 2024 07:39

டோன்ட் கிவ் ரிப்ளை டு கமல் சார் அண்ட் வேஸ்ட் யுவர் time


Bala
ஏப் 09, 2024 21:48

தலைவா நீங்க கலக்குங்க தலைவா பாஜக பாமக கூட்டணி இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் திராவிடதிற்கு இடம் இனிமேல் தமிழகத்திற்கு வெளியேதான் மணவாடோ மாட்லாடோ அல்லது அச்சச்சன் கொச்சச்சனிடம்தான்


sri
ஏப் 09, 2024 17:14

மன்னிப்பு கேட்க மாதிரி தெரியவில்லை அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


NicoleThomson
ஏப் 08, 2024 23:16

கார்பொரேட் குடும்பத்தின் அடிமை கூட்டம் என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறது , அதற்க்கு கூவ சில குள்ளநரிகளும்


பேசும் தமிழன்
ஏப் 08, 2024 19:17

கமல்.... ஏற்கெனவே அவர் கோமாளி போல தான் பேசுவார்.... இப்போது கீழ்ப்பாக்கத்தில் ஒரு சீட் வாங்கி கொண்டு தான் பிரசாரத்துக்கு போய் இருப்பார் போல் தெரிகிறது.... அவருக்கு வேறு சீட் கொடுக்கவில்லை..... கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சீட் தான் கொடுத்து இருப்பார்கள்


Sakthi Vel
ஏப் 08, 2024 16:09

இந்திய வரலாறு படிங்க அப்பறம் கமலை பற்றி பேசலாம்


பாமரன்
ஏப் 08, 2024 15:54

அடேங்கப்பா அண்ணாமலை அறிவு கெட்ட ஜீவனாம்ல நம்ம சேகர் சொல்லிட்டாப்ல அய்யோடா இதே சேகர் ஒத்தை ஆளா ஆயிடீம்காவுக்கு பாடுபட்டதை நினைச்சாலே எப்பிடியிருந்த நான் இப்பிடி ஆகிட்டேன் தான் ஞாபகம் வருது ?


Suppan
ஏப் 08, 2024 15:16

திமுக காரர்கள் மட்டுமல்ல வாங்கின காசுக்குக் கூவும் கம்யூனிஸ்ட்களும்தான் அடித்துவிடுகிறார்கள் சமீபத்தில் சட்டசபை அங்கத்தினர் பாலபாரதி ரேஷனில் இலவச அரிசி போடுவது தமிழகத்தில்மட்டும்தான் என்று அடித்துவிடுகிறார் அதுவும் ஸ்டாலினால் என்று கூசாமல் பேசுகிறார் பாரதம் முழுவதும் ஏழை மக்களுக்காக மத்திய அரசால் இலவச அரிசி கொடுக்கப்படுகிறது என்பதை மறைக்கிறார்


karthikeyan.p
ஏப் 10, 2024 14:32

aamam


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை