உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலை, சூரியனுக்கு ஓட்டளித்தது போதும்: அன்புமணி பிரசாரம்

இலை, சூரியனுக்கு ஓட்டளித்தது போதும்: அன்புமணி பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: 'இலை, சூரியனுக்கு ஓட்டளித்தது போதும், சின்னத்தை பார்த்து ஓட்டளிக்காமல் வேட்பாளரை பார்த்து ஓட்டளியுங்கள்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து, மொரப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 57 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் நல்லது மட்டும் நடக்கவில்லை. இரு கட்சிகளின் ஆட்சியில் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் கூட முறையான தண்ணீர் இல்லை.

வேட்பாளரை பார்த்து ஓட்டளியுங்கள்

திமுக வேட்பாளர் தலைமையை கேட்காமல் ஏதும் செய்யமாட்டார். அதிமுக வேட்பாளரை பக்கத்து தெருவில் உள்ளவர்களுக்கே தெரியாது. இலை, சூரியனுக்கு ஓட்டளித்தது போதும், சின்னத்தை பார்த்து ஓட்டளிக்காமல் வேட்பாளரை பார்த்து ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஏப் 10, 2024 18:16

உண்மை தான்..... தமிழக மக்கள் இதுவரை இரட்டை இலை மற்றும் சூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு என்ன பயன் !!! இனியாவது தமிழக மக்கள் மாத்தி யோசிக்க வேண்டும்.


Jai Sanker
ஏப் 10, 2024 15:18

ஓட்டு போடனுமா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை