உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி அரசு: கோவையில் ராகுல் தாக்கு

நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி அரசு: கோவையில் ராகுல் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடந்த இண்டியா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் காங். எம்.பி,.ராகுல் பேசியதாவது, நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் முக்கிய துறைகள் அனைத்தும் அதானிக்கே வழங்கப்படுகிறது. அதானியின் சலுகைகள் குறித்து நான் பார்லிமென்ட்டில் பேசியதால் என்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனது எம்.பி. பதவியை பறித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fiieg60y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் நான் நேசிக்கிறேன்.நாட்டு மக்களின் பலரின் இதயங்களில் வாழ்ந்ததால் எனது வீட்டை எடுத்துக்கொண்ட போதும் கூட நான் கவலைப்படவில்லை. தமிழர்களி்ன் வீட்டில் நான் உள்ளேன்.எனக்கு பல லட்சக்கணக்கான வீடுகள் இருக்கின்றன; அவை உங்கள் இதயங்களில் இருக்கின்றன. தமிழக மக்கள் எனக்காக தங்கள் வீட்டுக்கதவை திறந்து வைப்பார்கள்.தமிழர்களுக்கென தனியாக வரலாறு இருக்கிறது. தோசை பிடிக்கும் என கூறும் மோடி , இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் . டில்லி சென்றதும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்கிறீர்கள். தோசை மட்டுமல்ல, மோடிக்கு வடை கூட பிடிக்கலாம் ஆனால் பிரச்னை அது அல்ல. மோடிக்கு தமிழ்நாட்டை பிடிக்குமா? தமிழர்களுக்காக மோடி என்ன செய்தார் என்பது தான் பிரச்னை.தமிழர்கள் புத்திசாலிகள் , யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தமிழ்மொழி வரலாறு மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள். ஊழல் செய்தவர்கள் பா.ஜ., வைத்துள்ள வாஷிங்மிஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள் எனது மூத்த அண்ணன் ஸ்டாலினை தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை. தேர்தல் பத்திரம் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியது, பா.ஜ., ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது பா.ஜ., உலகிலேயே பா.ஜ. செய்த தேர்தல் பத்திர ஊழலின் சிறு பகுதி. ஆங்கிலேயர் காலத்தைவிட இந்தியா இப்போது மோசமான நிலையில் உள்ளது. தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்னை ‛நீட்' . நீட்' தேர்வை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் முடிவுக்கு விடப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். வேலைவாய்ப்புக்குள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் கொண்டு வரப்படும். இதில் 6 மாதம் பயிற்சி அளித்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய விலை பொருட்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலைவாயப்பு அதிகரிக்கப்படும். மகளிருக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல. எனவே இத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரவு அளித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேணடும். இண்டியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு ராகுல் பேசினார்.

கோவையில் இனிப்பு வாங்கிய ராகுல்

கோவையில் பிரசாரத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாக்கிய ராகுல் உடன் பணியாளர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

N SASIKUMAR YADHAV
ஏப் 13, 2024 12:43

மோடி என்ற சமூகத்தின்மீது வாய் கொழுப்பெடுத்து பொய் செய்திகளை பரப்பியதற்குதான் உங்களின் எம்பி பதவி பறிக்கப்பட்டது . இப்போது மாற்றி பொய் சொல்கிறீர்கள் ராகூல் அவுர்களே பொய் மட்டுமே உங்க புள்ளிராஜா இன்டி கூட்டணிக்கு மூலதனம்


N SASIKUMAR YADHAV
ஏப் 13, 2024 12:38

தமிழர்கள் இலங்கையில் இந்த இருக்கட்சி ஆதரவோடு அழிந்து கொண்டிருந்தபோது இங்கே கருநாநிதி பதவி வெறிக்காக டெல்லியில் முகாமிட்டிருந்தார் இங்கே இப்போது மழைவெள்ளத்தில் தமிழகம் தத்தளித்தபோது தமிழக மொதல்வர் டெல்லியில் முகாமிட்டிருந்ததை மாதிரி இந்த இருகட்சிகளும் தமிழகத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது


lana
ஏப் 13, 2024 12:34

அம்பானி அதானி முதலீடு பெரும்பாலும் அடிப்படை தொழில் துறையில் இருக்கும். சுரங்கம் ஸ்டீல் petro chemicals port telecommunications என்று. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இங்கு உள்ள model மட வியாபாரி களின் தொழில் சாராயம் டிவி என்று மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் தொழில் ஆக இருக்கும். எது தேவை என்பதை மக்கள் உணர வேண்டும்


Balasubramanian
ஏப் 13, 2024 10:57

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் டாடா பிர்லா இருந்தனர் ! இந்தியாவில் தொழில் துறையில் அதிக முதலீடு செய்து பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை இப்படி அரசியல் காரணங்களுக்காக பேசினால், தொழில் முனைப்பு எவ்வாறு எடுபடும் இந்தியா கூட்டணி ஆட்சியில்?


குமரி குருவி
ஏப் 13, 2024 10:24

தி.மு.க.ஆளுவது வீட்டுக்கு கேடு


கண்ணன்
ஏப் 13, 2024 09:03

பத்தாண்டு ஆட்சி காலத்தில் நீங்கள் இருந்தபோது நடந்ததுதான் அராஜக ஆட்சி உங்கள் கொள்ளைக் குடும்ப ஊழல் ஆட்சி 1947 முதல் தொடர்ந்து இடையில்1999-2004 தவிர்த்து நாட்டை அடகு வைத்து நடந்த ஆட்சிக்கு இப்போதைய ஆட்சி மேல்.


Kasimani Baskaran
ஏப் 13, 2024 06:32

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட அம்பானிகள், அதானிகள் இன்னும் கூட பெரிய அளவில் குத்தகைகளை பெறத்தான் செய்கிறார்கள்


R Kay
ஏப் 13, 2024 00:57

குறைந்த பட்சம் சீன அரசின் கைப்பாவையாக இந்திய அரசு ஆகவில்லை உங்களிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்திருந்தால், இந்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவோரை விமர்சிக்கும் உங்களை போன்றவர்களை விட எவ்வளவோ மேல்


Sathya
ஏப் 12, 2024 23:47

Pappu is a dust bin and fit for nothing, including his talk. Support for corruption commission


Kalyanaraman
ஏப் 12, 2024 23:46

தமிழகத்தின் அதானி - ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், சன் டிவி, சாராய ஆலைகளின் சொந்தக்காரர்களை மேடையில் இருக்குபோது இப்படி பேசலாமா பப்பு ?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி