உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: கனிமொழி எம்.பி.,

மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: கனிமொழி எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில் : ''மத்தியில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்'' என்று நாகர்கோவிலில் நடந்த தி.மு.க ., தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசினார்அவர் மேலும் பேசியதாவது: தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு நடவடிக்கை. மத்திய பா.ஜ., அரசு சிறிது சிறிதாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டு இருக்கிறது. மக்களை பிரித்தாளும் மனப்பான்மையோடு ஒற்றுமையை சிதைத்து ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது. புதிய பிரச்னைகளை உருவாக்கி அதன் பின்னர் வேறு பிரச்னைகளை கொண்டு வந்து அதை முன் வைத்து வேலை வாய்ப்பின்மை , விவசாயிகளின் பாதிப்பு, மீனவர்களின் உரிமை பறிக்கப்படுவது போன்ற முக்கியமானவற்றை மறக்கடிக்கச் செய்கின்றனர்.மதக் கலவரம் , ஜாதி பிரச்னைகளை துாண்டிவிட்டு அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான் மத்தியில ஆட்சி செய்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் ஆட்சிமாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வோம். மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை