உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராமங்களுக்கு செல்லுங்கள்: கட்சியினருக்கு பா.ஜ., உத்தரவு

கிராமங்களுக்கு செல்லுங்கள்: கட்சியினருக்கு பா.ஜ., உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. எனவே, மிகப்பெரிய மக்கள் தொடர்பு சந்திப்பை ஏற்படுத்த கிராமங்களில் தங்கியும், மகளிர் குழுக்களை சந்தித்தும் பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுமாறு தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.நாடு முழுதும், பிப்., 1ம் தேதி முதல் மூன்றாவது வாரம் வரை, 'சக்தி வந்தனம்' என்ற பெயரில், 1 கோடி மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, 10 கோடி பெண்களை, பா.ஜ., மகளிரணியினர் தொடர்பு கொள்வர்.தமிழகத்தில் மகளிர் குழுக்களை சந்திக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 25 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் பா.ஜ., பெண் நிர்வாகிகள், சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களை சந்தித்து, பிரதமர் மோடி பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி எடுத்து கூறுவர்.இதுதொடர்பாக எப்படி நடக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு ஏற்கனவே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.பிரதமர் மோடி, 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு, 'முத்ரா' கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'கிராமங்கள் தோறும் இயக்கம்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிர்வாகியும் நான்கு நாட்கள் தங்களுக்கு ஒதுக்கிய கிராமத்திற்கு செல்ல வேண்டும்.ஒரு நாள் இரவு கிராமத்திலேயே தங்க வேண்டும். அங்குள்ள மக்களை சந்தித்து பிரதமரின் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், 6,000 ரூபாய் விவசாய நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் வந்துள்ளனவா என, கேட்பதுடன், அவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் வசிக்கும், 15,000 பெண்களுக்கு, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் இயக்க இலவச பயிற்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை, மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 22:17

ஆண்டுக்கு இரண்டுகோடி பேருக்கு வேலை தருவோம்னு மோடி சொன்னாரு... அதையே நிறைவேற்றவில்லை. இப்போது 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க போகிறாராம். ஏற்கனவே வங்கி கணக்கு துவங்கி, மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு போடுகிற பணத்தை எல்லாம் பறிச்சு பிட்சாதிபதி ஆக்கிட்டாங்க.. இதுல லட்சாதிபதி ஆக்கப் போறாங்களாம். இதெல்லாம் வாயில வடை சுடுற கதை தான்..


Indian
ஜன 31, 2024 14:24

தமிழ் நாட்டில் கிராம மக்களின் நிம்மதியை கெடுக்க ஜாதி வெறியை தூண்டவா ?


DVRR
ஜன 31, 2024 17:44

ஜாதிவெறியை மத பிரிவினையை தூண்டியவன் சொரியான் இப்போது அப்ப்டி செய்வது திருட்டு திராவிடர்கள்


duruvasar
ஜன 31, 2024 10:19

திரவிடியன் ஸ்டாக்குகள் அங்கே வந்து பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது.


sahayadhas
ஜன 31, 2024 09:23

ஆம்


பேசும் தமிழன்
ஜன 31, 2024 09:05

கட்சி வளர வேண்டும் என்றால்... முதலில் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு பலப்படுத்த வேண்டும்.... கட்சி அறிவிக்கும் போராட்டத்தில் கைதாகும் கட்சி ஆட்களை ஜாமீன் எடுக்க வேண்டும்... வழக்குகளை நடத்த வேண்டும்... அடுத்து கட்சிக்கு தனியாக ஒரு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை வேண்டும்... அப்போது தான் கட்சியின் போராட்டங்கள்.... திட்டங்கள் மக்களை சென்றடையும்...... இல்லையென்றால்... நீங்கள் என்ன தான் நல்லது செய்தாலும் அது மக்களை சென்றடையாத அளவுக்கு தடங்கல்கள் ஏற்படுத்துவார்கள்... ராமர் கோவில் பிரதிஷ்டை ஒன்றே அதற்க்கு சாட்சி.. அதன் நேரடி ஒளிபரப்பு செய்ய எப்படி தடை செய்யப்பட்டது என்று.. மக்களுக்கு நன்றாகவே தெரியும்.


தமிழ்
ஜன 31, 2024 12:26

கட்சி வளரவேண்டுமென்றால் முதலில் ஒருத்தரை ஒருத்தர் காலை வாரிவிடுவதை நிறுத்தவேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் மற்றவர்கள் செய்யும் தப்பை வீடியோ எடுக்கக்கூடாது, அவற்றை ரெகார்ட் செய்யக்கூடாது.


பேசும் தமிழன்
ஜன 31, 2024 08:58

கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றி.. மக்களுடன் இணைந்து... கட்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.... அப்போது தான் தேர்தலில் ஓட்டு கிடைக்கும்.


VENKATASUBRAMANIAN
ஜன 31, 2024 08:28

பாஜக திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றாலே போதும். மக்கள் புரிந்து கொள்வார்கள். எல்லோருமே திராவிட கட்சிகள் செய்வதாக நினைத்து கொண்டுள்ளனர். இதைத்தான் திமுக அதிமுக இரண்டுமே செய்து வருகின்றனர். இதை முறியடிக்க வேண்டும்


A1Suresh
ஜன 31, 2024 08:15

தமிழக பாஜக இன்னும் தூங்குகிறது வேண்டும் ஒரு தமிழ் சானல் பல நூற்றுக்கணக்கான மக்கள் நல வாழ்வு திட்டங்கள் பாஜக ஆட்சியில் நிகழ்கின்றன . மன்மோகன் சிங் ஆட்சி போல எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்வதில்லை . மீனவர்கள் சுட்டு கொல்லப் படுவதில்லை. குண்டுவெடிப்பு நிகழவில்லை .உலகில் பொருளாதார நிகிலையில் 5 ஆம் இடம் . பல்வேறு விமான நிலையங்கள், போக்குவரத்து எக்ஸ்பிரஸ் வே சாலைகள், தனியாக சரக்கு ரயில் துறை மற்றும் வழித்தடங்கள் , அந்தமான் -நிக்கோபாரில் இரண்டாம் பெரிய துறைமுகம், பாரத்மாலா, சாகர் மாலா,மேக் இந் இந்தியா, ஸ்வச் பாரத், விண்வெளி ஆராய்ச்சி , ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, விமானந்தாங்கி கப்பல்கள் , அணுசக்தியில் இயங்கும் நீர்முழ்கி கப்பல்கள் , என இவை யூ-டியுபில் இந்தியில் காண கிடைக்கின்றன . இவற்றை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் . மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் . மாறாக தமிழக பாஜக இன்னும் தூங்குகிறது


ஆரூர் ரங்
ஜன 31, 2024 10:50

ஜனம் தமிழ் சானல் ஒளிப்பரப்பைத் துவக்குகிறது. இப்போது ஆட்சேர்ப்பு நடக்கிறது.


அப்புசாமி
ஜன 31, 2024 08:09

யெஸ்.. நகரத்தில் இருப்பவங்களை முன்னேத்தி முடிச்சாச்சு ஹைன். இனிமே கிராமங்கள்தான் பாக்கி.


Sakthi,sivagangai
ஜன 31, 2024 08:46

உன்னை மாதிரி ஆட்கள் இன்னும் பாக்கி இருக்கும் வரை இந்தியா வேகமாக முன்னேறுவது கஷ்டம்தான்.


குமரி குருவி
ஜன 31, 2024 07:45

காங்கிரஸ் இல்லாத பாரதம் சாத்தியமாகும் வேளையில் திராவிடம் இல்லாத தமிழகம் ஆயத்த பணிகள் தயார்...


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி