உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "மக்களை தி.மு.க., அ.தி.மு.க.,வினர் புறம் தள்ளி விட்டனர்"- எல்.முருகன் குற்றச்சாட்டு

"மக்களை தி.மு.க., அ.தி.மு.க.,வினர் புறம் தள்ளி விட்டனர்"- எல்.முருகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீலகிரி: கூடலூர் மக்களை தி.மு.க., அ.தி.மு.க.,வினர் புறம் தள்ளி விட்டனர் என மத்திய அமைச்சரும், பா.ஜ., வேட்பாளருமான எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.நீலகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்டாளர் முருகன் இன்று, கூடலூர் தொகுதியில் ஒட்டுகள் சேகரித்தார். கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பிரசாரம் மேற்கொண்ட எல்.முருகன் பேசியதாவது: கூடலூர் மக்களை தி.மு.க., அ.தி.மு.க., புறம் தள்ளி விட்டது. தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்காக, டான் டீ நிறுவனம் துவங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், டான் டீ நிறுவனத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். 2009ல், இலங்கையில் பல லட்சம், இலங்கை தமிழர்களை கொன்று குவித்தனர். அங்கிருந்து வந்த தமிழர்களின், வாழ்வாதாரத்துக்காக துவங்கப்பட்ட டான்டீ நிறுவனத்தை (அரசு தேயிலை தோட்ட நிறுவனம்) இழுத்து மூட தயாராகி வருகின்றனர். டான் டீ தொழிலாளர்களுக்கு சரியான நியாயத்தை பெற்று தருவேன். கூடலூர் நகரின் போக்குவரத்து சீரமைக்க, மேம்பாலம் அமைக்கப்படும். இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

குழந்தையை கொஞ்சிய எல். முருகன்

கடலூரில் ஆறு மாத குழந்தையை மடியில் வைத்து எல்.முருகன் கொஞ்சினார். குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். கட்சியினர் கூறுகையில், 'எங்கள் கட்சியின் வேட்பாளர் எல். முருகன் எவ்வளவு எளிமையானவர். இந்நிகழ்வு ஒன்றே போதும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை