சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் இதுவரை எந்ததெந்த தொகுதிகள் என்பது முடிவாகாமல் இழுப்பறியில் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmj2j5ft&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழக காங்., தலைவர் செல்வ பெருந்தகை, 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிருபர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, 'தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது என்ற இனிப்பான செய்தியுடன் அடுத்த முறை செய்தியாளர்களை சந்திக்கிறேன். இண்டியா கூட்டணி நாடு முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றும்' எனத் தெரிவித்தார். மதிமுக.,வுக்கு திருச்சி
அதேபோல், திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக.,வுக்கு ஒரு தொகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி லோக்சபா தொகுதியை இன்று திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இந்த திருச்சி தொகுதி கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கடந்தமுறை திமுக.,வின் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை பம்பரம் அல்லது வேறு தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்:
வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, தேனி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி, கோவை, ஆரணி.மற்ற கட்சிகள்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 2 - விழுப்புரம், சிதம்பரம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 - மதுரை (சு.வெங்கடேசன்), திண்டுக்கல் (சச்சிதானந்தம்)இந்திய கம்யூனிஸ்ட் - 2 - நாகப்பட்டினம் (வை.செல்வராஜ்), திருப்பூர் (கே.சுப்பராயன்)இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 - ராமநாதபுரம்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 - நாமக்கல் (சூர்யமூர்த்தி)