உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்: உதயநிதி உறுதி

மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்: உதயநிதி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும்' என அமைச்சர் உதயநிதி கூறினார்.திருச்சி மணப்பாறை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: திமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கும் வைக்கும் வேட்டு. குறைந்தது 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தின் காலை உணவுத்திட்டம் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பெற மாதம் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும்.சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். மணப்பாறையில் கூடுதல் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். பொன்னியாறு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தில் சுமார் 7 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Mohan
ஏப் 07, 2024 21:23

ஏன் சார் , ஏற்கனவே அடகு வைச்சவங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வாங்கன்னு அறிவிச்சா பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரே வீட்டிலே பலபேர்ல அடகு வைச்சிட்டு எல்லாருக்கும் பணம் கொடுக்கனும்னு எதிர்பார்த்தா என்ன நியாயம் உண்மையிலேயே அந்த கடனை கட்ட முடியாதவங்க எத்தனை பேர் இருக்காங்க , அவங்களுக்கான பயனை தட்டி பறிக்கறது என்ன மனோபாவம்னு தெரியலை


Dinesh Pandian
ஏப் 07, 2024 17:22

எங்க செங்கல் காணோம் , மணப்பாறை முறுக்கை எடுத்திட்டு வரலாமே


kalidhas
ஏப் 05, 2024 10:13

ஆசையை தூண்டி விட்டு வீட்டுல இருந்த நகையை கூட்டுறவு பேங்க்ல அடகு வைக்க வச்சுட்டு கொள்ளை அடிச்சுட்டு அழைய வச்சீங்கலே அது போல ஏமாத்தவா நல்லது பண்ணுற கட்சி தலைவர்கள் இல்ல நோட்டாதா ஜெய்க்க போகுது


krishna
ஏப் 04, 2024 22:02

NEET RAGASIYAM KANDU PIDITHU VETRI.ADUTHU ANAITHU MAGALIRUKKUM URIMAI THOGAI RAGASIYAM .SEMGAL THIRUDANAI NAMBUM TASMC DUMILANS PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.


பேசும் தமிழன்
ஏப் 04, 2024 19:33

இவர்களுக்கு ஓட்டு போடுபவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வதாக தான் அர்த்தம்.


Kannan
ஏப் 04, 2024 18:30

உங்க அப்பன் வீடு சொத்தையா குடுக்க போற தமிழ்நாட்டுக்கு கடனையும் கொடுத்துட்டு போற


pv
ஏப் 04, 2024 18:09

உருட்டு உருட்டு எவ்வளவு வேணாலும் உருட்டு யாரும் கண்டுக்க மாட்டாங்க


KUMARAN TRADERS
ஏப் 04, 2024 17:27

தெரு நாய் மாதிரி வீட்டில் குலைப்பதையும் எல்லாரும் நிறுத்த வேண்டும் ஏனென்றால் நீட்டை எங்களிடம் ஒரே நிமிஷத்தில் ஒலித்து விடுவோம் இந்த மாதிரி சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி மறுபடியும் பொய் சொல்லாதீர்கள் இப்படியே பேசினாள் பொய் சொல்லியே வந்தால் வாயில் புழு பூச்சி பிடித்து விடும் ரொம்ப ஜாக்கிரதை


angbu ganesh
ஏப் 04, 2024 16:52

தமிழ் நட்டு மக்கள் என்ன அவ்ளோ கூமுட்டைங்களா


Suppan
ஏப் 04, 2024 16:05

அடித்துவிடுவதில் இது ஒரு முத்து இலவச பஸ் பயணத்தில் ஏழு கோடி பேர் பயனடைந்துள்ளனர் தமிழகத்தில் ஏழு கோடி பெண்கள் உள்ளனரா என்ன?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை