உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100' நிகழ்ச்சியில் ரசிகர்கள் குறைவாகவே பங்கேற்றனர். குறிப்பாக முக்கிய நடிகரான ரஜினி பேசும்போது கூட காலி இருக்கைகளே தென்பட்டன. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lvcu4vom&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது.ரசிகர்கள் பொறுமை இழக்கும் அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக நடிகர் ரஜினி பேசும்போது ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். ஆனால் இம்முறை ரஜினி பேசும்போது முழுவதும் நிசப்தமே நீடித்தது. காலி இருக்கைகளுக்கு முன்பு மேடையில் ரஜினி பேசுகையில் சொற்ப எண்ணிக்கையிலான ரசிகர்களே கவனித்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் வருகையும் குறைவாக இருந்தது. ‛கலைஞர் 100' நிகழ்ச்சி சிறப்பாக அமையவில்லை என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 106 )

T.S.SUDARSAN
ஜன 11, 2024 11:18

சனாதன பெருமைகளை தெரிந்துகொண்டீர்களா?


g.s,rajan
ஜன 08, 2024 22:09

உ.பி க்கள் உ.பா வுக்கு ரொம்ப அடிமைகள் ஆயிட்டாங்க ....


M Ramachandran
ஜன 08, 2024 19:53

எல்லா இடத்திற்கும் மஞ்சத்துண்டு பெயர் அது தான் சொதப்பலுக்கு காரணம்.


Bhakt
ஜன 08, 2024 11:49

கலைஞர் "200" என்று பேனர் போட்டிருந்தால் உபிஸ் கூட்டம் அலை மோது இருக்கும்.


Veluvenkatesh
ஜன 08, 2024 11:24

இம்மாம் பெரிசு கூட்டத்தை பாத்தும்....? இப்படி ரீலு விட்டு அவமான பட வேண்டுமா? ஒரு நடிகனுக்கு வசனம் எழுதி அந்த மாபெரும் நடிகனை கதாநாயகனா மாத்திட்டானாமே? அட பாவத்த - இப்படியும் ஒரு முட்டா?


Shekar
ஜன 08, 2024 09:39

இது கலைஞர் நூறு என்னும் விழா, அதனால் நாங்கள் நூறு பேரை மட்டும் அழைத்தோம், ஆனால் இந்த சங்கிகள் அவதூறு பரப்புகிறார்கள், சேர் அதிகமாக காலியாய் இருப்பதற்கு காரணம், சேர் ஆர்டர் செய்யும்போது நூறு நூறு கொண்டுவா என்று அந்த வயதானவருக்கு கேட்கட்டும் என்று இரு முறை நூறு என்று சொல்லிவிட்டோம். ஆனால் அவர் நூறு நூறு= பத்தாயிரம் என்று நினைத்து இத்தனை சேர் கொண்டுவந்துவிட்டார். இவ்வாறு செயல் பாபு நமது நிருபரிடம் கூறினார்


ramaraj p
ஜன 08, 2024 09:39

பிளாஸ்டிக் சேர் ல உட்கார மக்கள் ஒன்னும் திருமா இல்லை யே????????


Koushikram B
ஜன 08, 2024 09:24

சரியான திட்டமிடல் இல்லாததே காரணம்...ரஜினி மீது குறையில்லை.


Matt P
ஜன 08, 2024 08:39

படத்தை நல்லா பாருங்க.


அப்புசாமி
ஜன 08, 2024 07:58

ஒரு ஆள் வந்தா நூறு ஆள் வந்த மாதிரிடா... பாட்சா பாரு.. பாட்சா பாரு.. கூடி வந்த கூட்டம் பாரு..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை