உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை சித்திரை திருவிழா இன்று துவக்கம்

மதுரை சித்திரை திருவிழா இன்று துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நாட்களில், தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில், காலை, மாலை வீதி உலா வருகின்றனர். மே 6 முதல் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து, மே 8 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 10 தீர்த்தவாரி உற்சவத்துடன், மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக, மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை