உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே வீட்டில் 35 நாய்கள்; தெருவில் நடமாட முடியவில்லை என மதுரை மக்கள் கொந்தளிப்பு

ஒரே வீட்டில் 35 நாய்கள்; தெருவில் நடமாட முடியவில்லை என மதுரை மக்கள் கொந்தளிப்பு

மதுரை: மதுரை மாடக்குளம் பகுதியில் ஒரே நபர் 35 நாய் வளர்ப்பதால் தங்களுக்குபாதுகாப்பில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.மதுரை மாடக்குளம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவு இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரோட்டில் நடந்து செல்லவும் முடியவில்லை; இரு சக்கர வாகனங்களில் செல்லவும் முடியவில்லை; தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிப்பதாக ஊர்மக்கள் புலம்புகின்றனர்.இது குறித்து மாடக்குளம் பகுதி மக்கள் கூறியதாவது: தெருவில் 10 மணிக்கு மேல் எந்த இருசக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தெரு நாய்கள் விரட்டுகின்றது. ஒரே ஒருவர் மட்டும் 35 முதல் 40 தெரு நாய்களை வளர்க்கிறார். தெரு நாய்களுக்கு சாப்பாடு போடலாம். குறை சொல்லவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?நாய்கள் துரத்தும் போது எப்படி தெருவில் செல்ல முடியும். மாடக்குளம் முதல் பழங்காநத்தம் மெயின் ரோடு வரை தெரு நாய்கள் அதிகம் மக்களை துரத்துகிறது. நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்தோம். அவர்கள் மாநகராட்சியிடம் புகார் அளிக்க சொல்கிறார்கள். மாநகராட்சி தான் தீர்வு காண முடியும் என சொல்கிறார்கள். போராட்டம் நடத்தினால் போலீசார் எங்களை சமாதானம் செய்து வீட்டிற்கு செல்கிறீர்களா அல்லது கைது செய்யவா என மிரட்டுகிறார்கள். நாய்களை மாநகராட்சியினர் பிடித்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Chan
பிப் 25, 2025 08:32

என் வீட்டிலும் நாய் உள்ளது. ஆனால் தெரு நாய்க்கு என்ன தான் சோறு போட்டாலும் இன்னும் சில நாய்களுடன் சேர்ந்து துரத்துகிறதே


Asha rajasekar
பிப் 21, 2025 08:31

முதலில் அந்த வீட்டில் உள்ளவர்கள் ஐ கடித்தால் தான் புத்தி வரும்


தமிழன்
பிப் 21, 2025 02:48

கேடுகெட்ட ஜெனிபர் அஜய் மாதிரியானவைகளை கல்லால் அடிக்க வேண்டும்


தமிழன்
பிப் 20, 2025 16:05

அந்த கேடுகெட்ட கருமாந்திரம் புடித்த, நாய்களை வளர்ப்பவனுக்கும் போலிஸ்காரனுக்கும் நாய் தின்ற எச்ச தட்டில் சோத்தை திங்க வைக்க வேண்டும் பிறகு தானாக திருந்துவானுகள் பிராணிகளை துன்புறுத்தக் கூடாதுதான் அதற்காக மனித உயிர்களை பலி கொடுக்க முடியாது அரசாங்கமும் கேடுகெட்டதாக உள்ளது நான் முதல்வரின் தனி பிரிவுக்கே மனு அளித்தேன் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து தெருவிலேயே மீண்டும் விடுகிறானுகளாம் கட்சியின் தலைமை மற்றும் அதன் அல்லக்கைகள் வீட்டில் கொண்டு போய் நாய்களை விட்டுவிட்டு வர வேண்டும் அப்போது திருந்துவானுகள் என்று நினைக்கிறேன் இதற்கு ஒரே வழி மாநிலம் முழுவதும் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாட்டில் நாய்கறியையும் தின்கிறானுகள் அவனுகளுக்காவது உபயோகமாக இருக்கும்


jennifer ajay
பிப் 20, 2025 17:33

உன்ன மாதிரி நண்றிய் இல்ல நாய்களால் இல்லை.... பைரவர். ... நீ எங்காவது. ... ஒரு உதவி செய்திருப்பாய் என்றல் உன் வெது வெட்டு வீராசாமி. .. திருடன் இன்னும்ம் வராமல் இருபது இந்த 5 அறிவி... டாக்ஸ் பிரியலின்ட் இந்த உ ர் பேட் ஒர்டஸ். ....


தமிழ்வேள்
பிப் 20, 2025 20:16

ஜெனிஃபர் அஜய், தினமும் நாலு தெரு நாயை உம்மோடு வைத்து கொண்டு கொஞ்சு...பொது வெளியில் இம்சை செய்தால் நாய்களை அடித்து கொல்லாமல் என்ன செய்வார்கள்?...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை