உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து: லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து: லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் கிராம உதவியாளர்(தலையாரி) தனது வருமானத்தை மீறி ரூ.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்ட செக்கானுாரணியைச் சேர்ந்தவர் பாண்டி 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளம் கிராம உதவியாளராக உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசார், ஆவணங்களின் அடிப்படையில் ரூ.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதிசெய்து வழக்குப்பதிவு செய்தனர். அதில், 2018 முதல் 2023 மார்ச் வரை மதுரை திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராக பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி தனது பெயரிலும், மனைவி ராணி, மகன்கள் பெயர்களிலும் சொத்து சேர்த்துள்ளார். இவரது மூத்த மகன் பிரபாகர், தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மாளவிகா. உடல்நலக்குறைவால் பிரபாகர் இறந்ததை தொடர்ந்து, இரண்டாவது மகன் பிரகாஷூற்கு மாளவிகாவை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் மாளவிகா குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். பிரகாஷூம் கடந்தாண்டு ஜூன் 23ல் இறந்தார். இரு மகன்களின் பெயரிலும் சொத்துகள் இருக்கின்றன. இதன்அடிப்படையில் பாண்டி வருமானத்திற்கு மீறி மொத்தம் ரூ.67 கோடியே 25 லட்சத்து 634 மதிப்புள்ள சொத்து சேர்த்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கூறுகையில், ''இச்சொத்துகள் பெரும்பாலானவை மனைவி தரப்பில் இருந்து தரப்பட்டதாக பாண்டி கூறுகிறார். சொத்துக்கள் கைமாறி போகாமல் இருக்கவே மாளவிகாவை இளைய மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

duruvasar
டிச 11, 2025 15:42

இதுவும் ஐயா நேருவின் துறையின் கீழ்த்தானே வருகிறது.


Ramesh Sargam
டிச 11, 2025 11:57

தினம் தினம் இப்படி ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்கள் மீது வழக்குகள்தான் பதிவாகிறதே தவிர, அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது, தண்டனை கிடைக்கிறதா இல்லையா என்கிற செய்தி வருவதில்லையே...? அது ஏன்?


Yasararafath
டிச 11, 2025 11:53

அதிகமாக ஆசைபட்டால் இப்படி தான் நடக்கும்.


S.V.Srinivasan
டிச 11, 2025 11:43

கிராம உதவியாளருக்கே 67 கோடி சொத்தா . திராவிட மாடல்னா சும்மாவா . வர தேர்தலுக்கு திராவிட மாடல் சார்புள்ள நில்லுப்பா.


Mohan
டிச 11, 2025 10:05

ஆண்டவனுக்கே பொறுக்கலே இனி எத்தனை பாவம் செஞ்சு ஊரான் சாபத்தை சம்பாரிச்சுட்டு போன இப்படித்தான். எல்லாரும் இதே தவறு செய்கிறார்கள். அரசியல்வியாதி கொள்ளை அடிக்குறானா அவன் செஞ்ச கர்மவினை தான அமையும் ...இதுக்கு நம்ம முதல்வரும் அவுங்க கூட்டமும் சாட்சி. அலிபாபாவும் 40 திருடர்களும் போன ஜென்மத்துல நல்லது பண்ணிருப்பாங்க அது தான் அவுங்களுக்கு தான அமையுது


c.k.sundar rao
டிச 11, 2025 09:55

Why DVAC is not filing FIR in the case of NEHRU dept where corruption is involved in billions rupees.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 11, 2025 12:22

2021 லிருந்து இதுவரை எந்த விஷயத்துக்காக கேஸ் பதிவு செய்து இருக்கிறார்கள்? 30000 கோடியில் இருந்து நேற்றைய 1020 கோடி வரை எதற்கும் எந்த நடவடிக்கையுமே இல்லை என்பதால் ரகசிய உறவு இருக்குமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. சந்தேகத்தை வலுப்படுத்த தலைவரையும் பதவி நீக்கம் செய்துவிட்டார்கள். இனி இருப்பது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைப்பதுதான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:25

மேலிடத்து குடும்பத்தலைமை வரைக்கும் பங்கு கொடுக்காததுதான் காரணமோ >>>>


Babu
டிச 11, 2025 09:13

Arasan effvazhiyo makkal affvazhi


எஸ் எஸ்
டிச 11, 2025 08:53

தலையாரியே இவ்வளவு சொத்து சேர்த்தால் படிப்படியாக மேலே இருப்பவர்களை நினைத்து பார்த்தால் மலைப்பாக இருக்கிறதே! 1980க்கு முன் கிராம முன்சிப் ஆக இருந்தவர்கள் எல்லாம் கெளரவ உத்தியோகமாக நன்கு செயல்பட்டு வந்தனர்


Modisha
டிச 11, 2025 08:51

திமுக ஆட்சியில் இது ரொம்ப சாதாரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை