மேலும் செய்திகள்
சிறார்கள் கையில் பட்டாக்கத்தி: திமுக அரசு மீது இபிஎஸ் கோபம்
4 hour(s) ago | 6
காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
7 hour(s) ago | 16
கோவை : மதுரை, தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 33; கோவை துடியலுார், சுப்பிரமணியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.நேற்று காலை, 6:00 மணிக்கு காசிநஞ்சேகவுண்டன்புதுார் பகுதியில் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தி தப்பினார்.படுகாயமடைந்த ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில், கோவை, பன்னிமடையை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன், 42, என்பவருக்கும், ஜெய்கணேசுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.நேற்று காலை, கே.என்.ஜி.புதுார் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு ஜெய்கணேஷ் வந்த போது, அங்கு வந்த சாமிநாதனுக்கும், ஜெய்கணேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சாமிநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெய்கணேஷை குத்தியதில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. தலைமறைவான சாமிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
4 hour(s) ago | 6
7 hour(s) ago | 16